இலங்கை பிரச்னையில் விடுதலைப் புலிகளை விமர்சித்து சில தகவல்களை சொன்ன
முதலமைச்சர் ஜெயலலிதா, திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு
அதிரடியான முடிவுகளை எடுக்கிறாரே? என்ற கேள்விக்கு பதில் கூறியுள்ளார்
(சசிகலா) நடராஜன்.
இது பற்றி கருத்து கூறியுள்ள நடராஜன், “ஜெயலலிதா விடுதலைப் புலிகளை விமர்சித்து சில தகவல்களை சொன்னது உண்மைதான்.
சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையிலேயே, ‘இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு பெற்றுத் தருவதற்கான உறுதியான முயற்சிகள் எடுக்கப்படும்’ என்று தெளிவா சொல்லிருக்காங்க.
அதுவுமில்லாமல், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போர் நிறுத்த நாடகம் ஆடி கருணாநிதி காங்கிரஸ் கூட்டணி 27 இடங்களை ஜெயித்து விட்டது. அடுத்து வந்த சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி கண்டார்கள்.
இதற்கு காரணம் இலங்கை விவகாரம்தான் என்று தெரிந்து கொண்ட கருணாநிதி, இப்போது டெசோ ஆயுதத்தை கையில் எடுத்து இலங்கை தமிழர்களுக்கு சாதித்தவர் போல் காட்டிக் கொள்ள நினைக்கிறார். அவரது முகத்திரையை கிழிக்க வேண்டிய பொறுப்பு ஜெயலலிதா அம்மையாருக்கு இருக்கிறது.
அதனால்தான் அவர் இலங்கை தமிழர் விவகாரத்தில் அடுத்தடுத்து அதிரடியான முடிவுகளை எடுத்து வருகிறார். அவரது வியூகங்களுக்கு முன்னால் கருணாநிதியில் டெசோ நாடகம் தோற்றுப் போகும்” என்று தெரிவித்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக