இலங்கைத் தமிழ் இஸ்லாமியப் பெண் ரிசானா நபீக்
சவுதி அரசாங்கத்தால் தலைவெட்டி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடக்கும்
விவாதங்களை அறிவீர்கள். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த, வெகு சிலர் மட்டுமே
இந்த விவகாரத்தில் ஷரியத் சட்டத்தையும் சவுதி அரசையும் விமர்சித்து
வருகிறார்கள். இவ்விவகாரத்தில் சரியான முறையில் எதிர்வினையாற்றியிருந்த
மனுஷ்யபுத்திரனை, தவ்ஹீத் ஜமாத் என்ற மதவெறிக் கும்பலின் தலைவர் பி.ஜைனுலாபிதீன் வார்த்தைகளாலேயே கொலை செய்திருந்ததும், அதைத் தொடர்ந்து வினவு தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையும் வாசகர்கள் அறிந்ததே.
ஷரியத் சட்டத்தின் ‘மாண்பை’ நிலைநாட்ட களமிறங்கியுள்ள பி.ஜே கும்பல், அதற்கு ‘கலர் கலராக’ விளக்கங்களைத் தந்து வருகிறது. நக்கீரனில் மனுஷ்யபுத்திரன், ஆனந்த விகடனில் பாரதி தம்பி – உள்ளிட்டு ஷரியத் சட்டத்தை விமர்சித்தவர்களை “டேய்… மரியாதையா நேரடி விவாதத்திற்கு வாங்கடா… #$%&*#@#$…” என்று சவுதி வஹாபியம் இவர்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ள மரியாதையோடும் கண்ணியத்தோடும் கோட்டா சீனிவாசராவ் பாணியில் விவாதத்திற்கு அழைத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக சென்னை மண்ணடியில் சென்ற 27.1.2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் “இஸ்லாமிய சட்டமே தீர்வு” என்ற தலைப்பில் நடத்திய பொதுக்கூட்டத்திற்கு சென்று வந்தோம்.
நாங்கள் சென்றிருந்த போது கோவை ரஹ்மத்துல்லா என்பவர் பேசிக் கொண்டிருந்தார். பேச்சினூடாக பாரதி தம்பி, ஜோஸபின் உள்ளிட்ட பத்திரிகையாளர்களோடு சேர்த்து மனுஷ்யபுத்திரனுக்கும் மண்டகப்படி நடந்து கொண்டிருந்தது. “பாதிக்கப்பட்ட குடும்பத்தைப் பற்றி யோசித்தீர்களா மிருகங்களே….” என்றவர், “இந்த ரிசானா நபீக் என்ன பத்தினியா.?.” என்று திடீரென்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.
எல்லா ஆணாதிக்கப் பன்றிகளின் வாயிலிருந்தும் வருகின்ற வழக்கமான டயலாக் இது. ரிசானா நடத்தை கெட்டவளாவதற்கு குறைந்த பட்சம் ஒரு ஷேக்கின் துணையாவது தேவை என்பது ரஹ்மத்துல்லாவுக்கு தெரியாதா? அந்த ஷேக்கை கண்டு பிடித்து தண்டித்து விட்டார்களா? இத்தகைய குற்றம் செய்யும் ஆண்மகனுடைய உறுப்பை, எதைக் கொண்டு அறுப்பது என்று ஷரியத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா? அல்லது “குருதிப்பணம்” மாதிரி ஏதாவது அபராதம் கட்டிவிட்டு அத்தகைய மைனர் குஞ்சுகள் எஸ்கேப் ஆவதற்கு இறைவன் தன்னுடைய சட்டத்தில் வழி செய்து கொடுத்திருக்கிறானா?
தங்கள் மதத்தையே சார்ந்த பரிதாபத்துக்குரிய ஒரு ஜீவனை ரகமதுல்லாக்களும் ஜெயினுலாபுதீன்களும் இப்படிக் குதறுவதற்கு காரணம், அவள் ஒரு பெண், அதுவும் ஏழைப்பெண், இலங்கை என்ற ஏழை நாட்டைச் சேர்ந்த ஏழை தமிழ்ப் பெண். இவர்களோ, சவூதி ஷேக்குகளின் பங்களா நாய்கள்.
ரிசானா நபீக்கை தமிழ் சீரியலில் வரும் வில்லி ரேஞ்சுக்கு சித்தரித்து, மொழி தெரியாத நாட்டில் தெற்கு வடக்கு அறியாத ஊரில் பயங்கரமாகத் திட்டம் தீட்டி குழந்தையைக் கொன்ற கொலையாளி என்பதாக விவரித்து முழங்கிக் கொண்டிருந்த ரஹ்மத்துல்லா, ரிசானாவுக்கு அந்தக் குழந்தையைக் கொலை செய்வதற்கு என்ன நோக்கம் இருந்திருக்க முடியும் என்ற மிகச் சாதாரணமான கேள்விக்கு கூட கடைசி வரைக்கும் பதிலளிக்கவில்லை.
குழந்தைக்கு பாலூட்ட வேண்டிய கடமை ஷரியத் சட்டங்களின் படி யாருக்கு உள்ளது, வேலைக்காரிக்கா? பணக்காரப் பெண்களின் கடமைகள் என்ன, ஏழைப்பெண்களின் கடமைகள் என்ன என்று ஷரியத் சட்டத்தில் அல்லா தனித்தனியாக பிரித்து எழுதியிருக்கிறானா? எல்லாப் பெண்ணுக்கும் ஒரே சட்டம்தான் என்றால், பிள்ளைக்கு பால் கொடுக்க முடியாத தாயை அல்லவா முதலில் விசாரிக்க வேண்டும்? 3 மாதக் குழந்தைக்கு பால் கொடுப்பதற்குக் கூட ஆள் வைத்து விட்டு, ஷேக்கின் பொண்டாட்டி எங்கே போயிருந்தார்? பியூட்டி பார்லருக்கா, தொழுகை நடத்தவா?
ஆண்களின் துணையின்றி ரோட்டில் நடந்தாலே சாட்டையால் அடிக்கும் தலிபான்களை நியாயப்படுத்துகின்ற இந்த தமிழக தலிபான்கள், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஆண் துணையின்றி ஏழைப் பெண்களை இறக்குமதி செய்கிறார்களே வளைகுடா ஷேக்குகள், அவர்களுக்கு ஷரியத் கூறும் தண்டனை என்ன என்று தெரிவிக்கவில்லை. இப்படி பெண்களை இம்போர்ட் எக்ஸ்போர்ட் செய்யும் டிராவல் ஏஜென்சி முஸ்லிம்களுக்கு என்ன தண்டனை என்றும் கூறவில்லை.
ஒருவேளை, ஷரியத்துக்கு உண்மையாக நடந்து கொள்ள வேண்டும், (பெண்களை ஆண் துணையின்றி தனியாக வரவழைக்க கூடாது) என்ற உயர்ந்த நோக்கத்தில்தான் 70 வயது ஷேக்குகள் 13 வயது சிறுமிகளை இந்தியாவிலிருந்து நிக்கா செய்து அழைத்துப் போகிறார்களோ?
கடுகளவாவது நேர்மையோ சொரணையோ இருந்தால், இவர்கள் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும்.
வார்த்தைக்கு வார்த்தை ரிசானா தான் கொலையாளி என்று பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் உறுதிப் படுத்தியுள்ளதாகச் சொன்ன ரஹ்மத்துல்லா, கடைசி வரை அதன் அறிக்கையின் நகலை கூட்டத்தில் படித்துக் காட்டவே இல்லை. அதிருக்கட்டும். பிரேதப் பரிசோதனை என்கிற பெயரில் இறந்த உடலைக் கிழிக்க இஸ்லாம் அனுமதிக்கிறதா? இல்லை என்று சொல்லும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும் உள்ளனர். உயிரோடிருப்பவர்களை வெட்டித்தான் கொல்லவேண்டும் என்று தெளிவாக கூறியிருக்கும் இறைவன், பிணங்களை அறுப்பது, தைப்பது, ஆடோப்சி ரிப்போர்ட் எழுதுவது ஆகியவை பற்றி எதுவும் சொல்லாமலிருக்க வாய்ப்பில்லை. அது குறித்து அல்லா பிறப்பித்திருக்கும் ஆணைகளையும் ரகமதுல்லாக்கள் விளக்குவது நல்லது.
அடுத்து இஸ்லாத்தை அமெரிக்கா உள்ளிட்டு பல்வேறு தரப்பினரும் இழிவாகச் சித்தரிக்கிறார்கள் என்றும், இதை அந்த அல்லாவே முன்னின்று முறியடிக்கிறாரென்றும் பேசத் துவங்கினார் ரஹ்மத்துல்லா. அமெரிக்கா நடத்திய ‘ஆய்வு’ ஒன்றின் படி தற்போது உலகில் 175 கோடி(!?) முசுலீம்கள் இருப்பதாக சொன்னார்.
இஸ்லாமியர்களில் பல்வேறு பிரிவினரையும் உள்ளடக்கிய மொத்த மக்கள் தொகை 150 கோடி என்கிறது ஐ.நா சபையின் கணக்கு. வகாபி தீவிரவாதிகளின் கருத்துப்படி ஷியாக்கள், அகமதியாக்கள் மற்றும் சுஃபி மார்க்கத்தினர் கொன்றொழிக்கப்பட வேண்டிய காஃபிர்கள். அந்த வகையில் அளவற்ற அருளாளனான அல்லாவின் திருக்கருணையால் எப்படியும் இவர்கள் கொல்லப்பட்டு விடுவார்கள் என்பதால், இவர்களின் எண்ணிக்கையை மொத்த முஸ்லிம்களின் எண்ணிக்கையிலிருந்து கழித்திருக்க வேண்டும்.
ஆனால் ரஹ்மத்துல்லாவோ, இன்னும் இருபது ஆண்டுகளில் முஸ்லிம்களின் மக்கட்தொகை 350 கோடிகளாக உயரும் என்று சொல்ல, கூட்டம் ‘அல்லாஹு அக்பர்’ என்று கூச்சலிட்டது. நமக்கோ முல்லா ஜோக் நினைவுக்கு வந்தது.
இந்தியாவில் இன்றைக்கு சிறுபான்மையினராக இருக்கும் இஸ்லாமியர்கள் மதமாற்றத்தின் மூலமும் பிள்ளை பெற்றுத் தள்ளுவதன் மூலமும் சீக்கிரம் பெரும்பான்மை பலம் பெற்றுவிடுவார்கள் என்பதே இந்து முன்னணி ராம கோபாலன்ஜீக்கள் காட்டும் பூச்சாண்டி.
இந்த நச்சுப் பிரச்சாரத்தையே கொஞ்சம் பட்டி பார்த்து பாலீஷ் போட்டு ‘ஆய்வு’ அறிக்கையாக அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளும் அவ்வப்போது வெளியிடுவது வாடிக்கை. இது போன்ற ‘ஆய்வறிக்கைகளின்’ மூலம் தான் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த மக்களிடம் இஸ்லாமியர்கள் பற்றிய ஒரு அச்சமூட்டும் பிரச்சாரமும், வெறுப்பும் கட்டவிழ்த்து விடப்படுகிறது. அதே சரக்கை தவ்ஹீத் மேடையிலிருந்து அவிழ்த்து விட்டு, கைதட்டலும் வாங்கி விட்டார் ரஹ்மத்துல்லா.
தொடர்ந்து பேசிய ரஹ்மத்துல்லா, “இஸ்லாத்தை தவறாகச் சித்தரிப்பவர்களின் வாயிலிருந்தே அல்லா இஸ்லாத்தின் சட்டதிட்டங்களின் ‘மேன்மையைப்’ பற்றிப் பேச வைக்கிறான்” என்று சொல்லி அதற்கு சில சான்றுகளையும் கூறினார். ”பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால் இஸ்லாமியப் பெண்கள் போன்று பர்தா அணிவது மேலானது” என்று மதுரை ஆதினம் அருணகிரி சொன்னாராம். இதைச் சொன்னவுடன் நமக்கு குமட்டிக்கொண்டு வந்தாலும் கூடியிருந்த கூட்டம், அல்லாஹு அக்பர் என்று சொல்லி புல்லரித்தது.
நித்தியானந்தா என்ற பொறுக்கியை இளைய ஆதீனமாக நியமித்துக் கொண்ட மைனர் அருணகிரியின் வாயால், பெண்களின் ஒழுக்கம் குறித்து அல்லா பேசுகிறானாம். என்னத்த சொல்ல, “எல்ல்…லா” புகழும் இறைவனுக்கே!
பாரதிய ஜனதா கட்சி, பெண்கள் பாதுகாப்பாக வாழ வேண்டுமானால் கண்ணியமான உடை உடுத்த வேண்டும் என்று கூறியது கூட அல்லாவின் பவர்தான் என்றார் ரஹ்மத்துல்லா. 2002 இல் குஜராத்தில் பர்தா போட்ட இஸ்லாமியப் பெண்கள் வல்லுறவுக்கு ஆளாக்கி கொல்லப்பட்டார்களே, அங்கே அல்லாவின் பவர் “கட்”டாகி விட்டதா, ஷட் டவுனா என்று கூறவில்லை.
ரஹ்மத்துல்லா பேசிய உரையில் வரிக்கு வரி தவறான தகவல்களும் வெற்றுச் சவடால்களுமே நிறைந்திருந்தன. “25 கோடி மக்கள் தொகை கொண்ட சவுதியில் நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. வருட்த்திற்கு 24 கொலைகளும் 13 கற்பழிப்புகளுமே நடக்கின்றன. இது மொத்த மக்கள் தொகையில் .0001 சதவீதம் தான்” என்றார் ரஹ்மத்துல்லா. அதிகாரப்பூர்வமாக சவுதி வெளியிட்டுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விவரங்களின் படியே அந்நாட்டின் மொத்த மக்கள் தொகை 2.7 கோடி தான். இதில் சவுதி தேசத்தவர் வெறும் 1.8 கோடியினர் தான்; மேலும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் 84 லட்சம். கூடவே ஷரியத் அமுல்படுத்தப்பட்டும் குற்றங்களின் சதவீதம் சமீப ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது என்பதற்காகவே குற்றங்களின் எண்ணிக்கை விவரங்களை வெளியிடுவதை 2011-ம் ஆண்டு முதலாக சவுதி அரசாங்கம் நிறுத்தியும் வைத்துள்ளது.
இத்தகைய பொய்களையெல்லாம் ‘எதிரி’களிடமிருந்து கடன் வாங்கிக் கொண்டாவது இஸ்லாத்தின் பெருமையை காப்பாற்ற வேண்டியிருக்கிறது போலும். அதுதான் அடுக்கடுக்கான பொய்களையும், அவதூறுகளையும் கரை புரண்ட வெள்ளம் போல பேச வைக்கிறது.
தொடர்ந்து சவுதியைப் பொறுத்தவரையில் இஸ்லாமியச் சட்டங்களின் படி யாராக இருந்தாலும் தண்டனை கொடுத்து விடுவார்கள் என்ற ரஹ்மத்துல்லா, அப்படிக் குற்றங்களில் ஈடுபட்டது சவுதி இளவரசன் குடும்பமாக இருந்தாலும், உயர்ந்த கோத்திரத்தைச் சேர்ந்தவராய் இருந்தாலும் சீவிப்புடுவோம் சீவி என்றார் (இதற்கும் ஒரு அல்லாஹு அக்பர்).
ஆனால் இலட்சக் கணக்கான இராக், ஆப்கான் குழந்தைகளையும் மக்களையும் காவு வாங்கிய அமெரிக்க ஏவுகணைகளுக்கு தளம் அமைத்துக் கொடுத்து, அமெரிக்க சிப்பாய்களுக்குத் தேவையான “மேற்படி” ஏற்பாடுகளையெல்லாம் செய்து கொடுத்த சவூதி அரச குடும்பத்தினரின் தலைகளை எந்த சீப்பை வைத்து தவ்ஹீத் காரர்கள் சீவிக்கொண்டிருக்கிறார்கள் என்றோ, அல்லது அல்லா சீவ இருக்கிறார் என்றோ ரஹ்மத்துல்லா சொல்லவில்லை.
பெண்களை பர்தா போட்டு மூடியோ, கல்லால் அடித்தோ, ஆண்களின் தலையை சீவியோ, சாட்டையால் அடித்தோ தான் சவூதி போன்ற நாடுகளில் பெண்களின் கற்பு காப்பாற்றப்படுகிறது என்றால், அப்பேர்ப்பட்ட நாட்டு ஆண்களின் யோக்கியதை எப்படி இருக்கும் என்று ரஹமத்துல்லா சிந்தித்துப் பார்க்கவில்லை. சாட்டையோ வாளோ கிடைக்காமல் போனால், அந்த நாட்டுப் பெண்களின் நிலை என்ன என்பதையும் அவர் சிந்திக்கவில்லை போலும்.
அடுத்து ரிசானா விவகாரத்தில் இஸ்லாமிய ஷரியா சட்டங்களை விமரிசித்து எழுதிய ஜோசபின் பாபா எனும் பத்திரிகையாளரைக் குறித்துப் பேசிய ரஹ்மத்துல்லா, அவர் கிருஸ்தவராகப் பிறந்த காரணத்தால் தான் இவ்வாறு எழுதி இருக்கிறார் என்றார். மேலும், கிருஸ்தவத்தைப் பற்றி எங்களுக்குத் தெரியாதா உங்கள் மதப் புத்தகமே ஆபாசக் குப்பை தானே என்றும் அதற்கு ஆதாரமாக பைபிளின் பழைய ஏற்பாட்டிலிருந்து கதை ஒன்றையும் குறிப்பிட்டுப் பேசினார் (இதற்கும் கூட்டத்திலிருந்து ஒரு அல்லா ஹு அக்பர்).
ரஹ்மத்துல்லாவைத் தொடர்ந்து பீ.ஜே விஸ்வரூபம் விவகாரம் பற்றிப் பேசத் துவங்கினார் ஜெயினுலாபுதீன். கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் இந்தப் படத்தை வெளியிட வேண்டுமென்று பத்திரிகைகளில் எழுதப்படுவது குறித்தும், சினிமாத்துறையினரும் அதே வகையில் கருத்துத் தெரிவித்து வருவதையும் விமர்சிக்கத் துவங்கிய பீ.ஜே, திரைத் துறையினரைப் பற்றியும் பத்திரிகைகள் பற்றியும் நாலாந்தர மொழியில் வசைபாடத் துவங்கினார்.
பீ.ஜேவின் வாதத்தில் விஸ்வரூபம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்பதை நிறுவும் நோக்கத்தை விட, டைம்பாஸ் ரகத்திலான படுக்கையறைக் கிசு கிசுக்கள் மற்றும் புவனேசுவரியின் சாகசங்கள், நடிகையின் கதை போன்றவையே அதிகம் இடம் பெற்றிருந்தன. உள் விவரங்களுடன் அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருக்கிறார். இவரை இஸ்லாமிய மார்க்க அறிஞர் என்று சொல்கிறார்கள். ஒரு “மார்க்கமான” அறிஞர்தான்.
பாரதிராஜா வீட்டினர் விபச்சாரிகளா என்று தனது வசைபாடலைத் துவங்கிய பீஜே, ஒவ்வொரு நடிகர் நடிகைகளின் படுக்கையறையாகப் புகுந்து புறப்படத் துவங்கினார். உச்சகட்டமாக, ஸ்ருதி ஹாசனையும் கமல்ஹாசனையும் பாலியல் ரீதியில் கீழ்த்தரமான முறையில் இணைத்துப் பேசிய போது கூட்டம் புல்லரித்துப் போனது. தீப்பொறி ஆறுமுகம் போன்றோர் பொதுக்கூட்டத்தில் இப்படிப் பேசும்போது, உடன்பிறப்புகள் விசில் அடிப்பார்கள். இது தவ்ஹீத் ஜமாத்தின் கூட்டம் என்பதால், விசிலுக்குப் பதிலாக ‘அல்லாஹு அக்பர்’ என்று கூட்டம் முழங்கியது. சும்மா சொல்லக் கூடாது, இறைவன் மிகமிகப் பெரியவன்தான்!
பீ.ஜேவின் பேச்சு இணையத்தில் கேட்கக் கிடைக்கிறது. அவருடைய பேச்சைக் கேட்கும் சராசரி முஸ்லிம் இஸ்லாமிய மதவெறியன் ஆகக் கூடும். அதே பேச்சு ஒரு சராசரி இந்துவை மதவெறியன் ஆக்கும். முதலாவதாகச் சொன்னது நடக்கவில்லை என்றாலும், இரண்டாவதாகச் சொன்னது நடந்தே தீரும்.
விஸ்வரூபம் மேட்டரில் மீன் பிடிப்பதற்கு நல்ல வாய்ப்பு இருந்தும் ஆர்.எஸ்.எஸ் காக்கி அரை டவுசர்களின் சத்தத்தை அதிகமாகக் காணோமே, என்று ஆச்சரியப்பட்டார் ஒரு நண்பர். மண்ணடி கூட்டத்துக்குப் போன பின்னர்தான் விசயம் புரிந்தது.
“நம்ம சார்பில் பி.ஜே பாய், பேசிக்கொண்டிருக்கும்போது நாமும் எதற்கு தொண்டை தண்ணியை வேஸ்ட் பண்ணவேண்டும்?” என்று ராம கோபாலன்ஜி மைக்கை ஆஃப் பண்ணியிருப்பார்.
000
குறிப்பு:
ஒரு கொள்கை என்ற அடிப்படையிலேயே மதச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகிய கோட்பாடுகளில் இஸ்லாமிய அமைப்புகளுக்கு நம்பிக்கை கிடையாது. அதனால்தான் சவூதியில் நடந்த ரிசானா கொலையை அவர்கள் நியாயப்படுத்துகிறார்கள். சில இஸ்லாமிய அமைப்புகள் மட்டும் வேறு வழியில்லாமல் ஒப்புக்கு கண்டிக்கின்றன. தற்போது, விஸ்வரூபம் பிரச்சினையை ஒட்டி, அம்மாவின் ஆதரவும் மாநில அரசின் ஆதரவும் தங்களுக்கு இருப்பதால், மதச்சார்பற்ற சக்திகள் தங்களை ஆதரிக்கிறார்களா இல்லையா என்பது பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று இஸ்லாமிய அமைப்புகள் கருதுவதையே அவர்களது பேச்சும் நடவடிக்கைகளும் காட்டுகின்றன. சாதாரண முஸ்லிம் மக்களைத் தற்கொலைப் பாதைக்குள் இவர்கள் தள்ளி விடுகிறார்கள், என்று எச்சரிப்பது எங்கள் கடமை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக