செவ்வாய், 29 ஜனவரி, 2013

இலங்கையில் ஆப்பிரிக்கர்கள்’ : அழிந்துவரும் ஓர் அடையாளம் !


இலங்கைக்குள்ளேயே சிறுபான்மையினரிலும் சிறுபான்மையாக இருக்கும் ஓர் இனம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரிதாக தெரியாமல் இருப்பது ஒரு அதிசயமே.
காலனிய நாடுகள் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளை விலைக்கு வாங்கிச் சென்று, தாம் ஆட்சி செய்த பிற நாடுகளில் பணியமயர்த்தியது வரலாற்றில் ஒரு கசப்பான உண்மை.
அக்காலகட்டத்தில் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து ஒரு தொகுதியினர் இலங்கைக்கும் அடிமைகளாக கொண்டுவரப்பட்டனர். அவர்களின் வம்சமே இந்தக் கஃபீர்கள்.இவர்கள் மொசாம்பிக் நாட்டிலிருந்து வந்ததாக தமது முன்னோர் கூறக் கேட்டதாகக் கூறினாலும், அது முற்றிலும் சரியா, அப்படியென்றால் மொசாம்பிக் நாட்டின் எப்பகுதியிலிருந்து வந்தார்கள் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் யாரிடமும் இல்லை.


இலங்கையில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இம்மக்கள் இருக்கிறார்கள்.
வடமேற்கே புத்தளம் மாவட்டத்தின் சிரம்பியடியில் இவர்களில் பெரும்பான்மையானவர்களும் கிழக்கே மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் ஆங்காங்கே சிலரும் வாழ்கிறார்கள்.
இலங்கையின் தேசிய மக்கள் கணக்கெடுப்பு ஆவணங்களில் கூட நாட்டில் மொத்தமாக எவ்வளவு கஃபீர் மக்கள் இருக்கிறார்கள் என்பதற்கான புள்ளி விபரங்களும் இருப்பதாகத் தெரியவில்லை.
மக்கட்தொகை கணக்கெடுப்பின் போது இவர்களும் சிங்கள மக்களாகவே கருதப்பட்டு கணக்கெடுக்கப்பட்டதாகவும் இம்மக்கள் கூறுகிறார்கள்.
இசையை ரசிக்கும் மக்கள்
கஃபீர் இன மக்கள் இசை மற்றும் நடனத்தை மிகவும் நேசிப்பவர்கள். அவர்களின் இசையின் அடிநாதத்தில் ஆப்பிரிக்க இசை வடிவத்தின் தாக்கம் இருந்தாலும், உள்ளூர் இசையின் கலப்பும் உள்ளது.
அவர்களின் சமூக ஒன்றுகூடல்களில் இசையும் நடனமும் முக்கிய பங்கு வகிக்கிறன.
எனினும் இந்த மக்கள் எந்த அளவுக்கு இலங்கை சமூகத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர் என்கிற கேள்விகளும் இருக்கவே செய்கின்றன

கருத்துகள் இல்லை: