கமல் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்’ படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என்ற இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தின.
இதையடுத்து,
தமிழக அரசு கடந்த 23-ந் தேதி இந்த படத்தை திரையிட 15 நாட்கள் தடை விதித்து
உத்தரவிட்டது. இந்த உத்தரவை தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள
மாவட்ட ஆட்சியர்கள் விதித்தனர்.
இந்நிலையில்,
கடந்த 24-ந் தேதி கமலின் ராஜ்கமல் நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில்
விஸ்வரூபம் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி மனு ஒன்று தாக்கல்
செய்யப்பட்டது. அந்த மனு அன்று மாலையே விசாரணைக்கு வந்தது. மனுவை
விசாரித்த நீதிபதிகள் படத்தை ஒருமுறை பார்த்துவிட்டு, அதன்பின்னரே
தீர்ப்பு அளிக்கப்படும் என்று 28-ந் தேதி வரை விசாரணையை ஒத்தி வைத்தார்.
இந்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கமலஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம் படத்தின் மீதான தடையை நீக்கக் கோரும் வழக்கில் தீர்ப்பு 29.01.2013 செவ்வாய் அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகளை சந்தித்துப் பேசுமாறு நடிகர் கமலஹாசனுக்கு சென்னை ஐகோர்ட் யோசனை தெரிவித்துள்ளது. படத்தின் பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு காணுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கமலின், ராஜ்கமல் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல்
செய்துள்ளது. அதில், விஸ்வரூபம் படத்திற்கு மாவட்ட ஆட்சியர்கள் விதித்த
தடையை உடனே நீக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக