புதன், 30 ஜனவரி, 2013

விஸ்வரூபம் தீர்ப்பை ஒத்திவைக்குமாறு அரசு கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்!

கமலஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்திருந்த தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. தணிக்கை செய்யப்பட்ட படத்தை தடை செய்ய மாநில அரசுக்கு உரிமை இல்லை என்று அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
29.01.2013 அன்று நடைபெற்ற விசாரணையில் இரவு 8 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறிய நீதிபதி, தொடர்ந்து 10 மணிக்கு தீர்ப்பை ஒத்திவைத்தார். இதன்படி இரவு 10 மணிக்கு தீர்ப்பை வழங்கிய நீதிபதி, படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கப்படுவதாக குறிப்பிட்டார்.
முன்னதாக, விஸ்வரூபம் பட வழக்கில் தீர்ப்பை 30.01.2013 வரை ஒத்திவைக்க வேண்டும் என்று தமிழக அரசு வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் வாதாடினார். அப்போது தமிழக அரசு மேல் முறையீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.
தீர்ப்பை ஒத்திவைக்குமாறு தமிழக அரசு வழக்கறிஞர் விடுத்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, இரவே தீர்ப்பை வழங்கினார். தமிழக அரசு விரும்பினால் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: