டெல்லி மாணவியை கற்பழித்து கொன்ற வழக்கில் குற்றம்சாற்றப்பட்டுள்ள ஆறு பேரில் அதிக குற்றம் புரிந்தவராக கூறப்படும் குற்றவாளி சிறுவன் என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மாணவி கற்பழிக்கப்பட்டு இறந்த வழக்கில், ஆறாவது குற்றவாளி என்று கூறப்பட்டவருக்கு வயது வரம்பை அறிந்து கொள்ள எலும்பு மஜ்ஜை சோதனை நடத்தப்பட இருந்தது. இந்த நிலையில் குற்றவாளி தரப்பில் இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை டெல்லி சிறார் நீதிமன்றம் இன்று விசாரித்தது.
விசாரணையின் போது அவர்கள் தரப்பில் குற்றம்சாற்றப்பட்டவரின் பிறப்பு சான்றிதழ் சமர்பிக்கப்பட்டது. விசாரணையின் இறுதியில் குற்றம்சாற்றப்பட்ட ஆறாவது நபர் 17 வயது ஆனவர் என்றும், அதனை பள்ளி சான்றிதழ்கள் மற்றும் பிறப்பு சான்றிதழே உறுதிப்படுத்துவதாகவும் நீதிபதி கூறினார்.
இந்த நிலையில், வயது வரம்பை கண்டறிய இதுவே போதுமானது என்றும், எலும்பு மஜ்ஜை சோதனை தேவையில்லை எனவும் சிறார் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
மாணவி கற்பழிக்கப்பட்டு, பின்னர் தாக்கி வீசப்பட்ட கொடூர சம்பத்தில் சிறுவன் என்று கூறப்படும் நபரே அதிக குற்றத்தில், மாணவியை துன்புறுத்தியதிலும் ஈடுப்பட்டதாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. எனவே குற்றத்திலிருந்து தப்பிக்க இத்தகை வயது வரம்பை காரணம் காட்டி தப்ப எண்ணுவதாக எதிர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இந்த வழக்கை மேல் முறையீடு செய்து உச்சநீதிமன்றத்திற்கு எடுத்து ல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக