“விஸ்வரூபம் படம் ஒட்டு மொத்தமான தடை செய்யப்பட வேண்டும்” என்று கூறிய இஸ்லாமிய அமைப்புகள், “படத்தில் உள்ள சில காட்சிகளை எடிட் செய்தால், போராட்டம் செய்ய மாட்டோம்” என அறிவித்து, பிரச்னையை முடித்துள்ளன. அதில் சிக்கல் ஏதுமில்லை. பிரச்னை நல்லபடியாக முடிந்தால் சரி.
பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட இஸ்லாமிய அமைப்புகளில் ஒரு அமைப்பின் பிரதிநிதி, பேச்சுவார்த்தைகளின் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார் (வீடியோ இருக்கிறது). எந்த அடிப்படையில், தாம் அனுமதி கொடுத்தோம் என அதில் அவர் விளக்கியுள்ளார். சுவாரசியமான விளக்கம் அது.
படத்தின் ஆரம்பத்தில், “இது நிஜமாக நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பு” என்று ஒரு வாசகம் வருகிறது. அதை நீக்கிவிட்டு, “படத்தில் காண்பிக்கப்படும் யாவும் கற்பனையே. யாரையும், எந்த மதத்தையும் குறிப்பவை அல்ல” என்று போட்டால், எமக்கு திருப்தியே. கற்பனையாக நீங்க என்ன வேண்டுமானாலும் எடுத்துவிட்டு போங்க. எங்களுக்கு பிரச்னை இல்லை.
ஆனால், இப்படியான தீவிரவாத செயல்களில் இஸ்லாமியர்கள் ஈடுபடுகிறார்கள் என்று ‘உண்மைச் செய்திகள்’ என்பதாக கூறாதீர்கள். அதுதான் எமக்கு கோபம். படத்தின் தொடக்கத்தில் “யாவும் கற்பனையே” என்று போட்டுவிட்டால் யாவரும் நலம் என்று கூறியிருக்கிறார்.
இதை கூறிய இஸ்லாமிய தலைவர் எந்தளவுக்கு உலக செய்திகளை படிப்பவர் என்று தெரியவில்லை. ஆனால், பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட தமிழக அரசு தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், போலீஸ் கமிஷனர் மற்றும் அதிகாரிகள் உலகச் செய்திகள் படிப்பவர்கள் என்று ஊகிக்கலாம். அவர்களில் யாரும் ‘களுக்’ என்று சிரித்ததாக தகவல் இல்லை.
எப்படியோ, “யாவும் கற்பனையே” அறிவிப்புடன் விஸ்வரூபம் வெளியாக போகிறது. இவர்களுக்கும் சந்தோஷம்.. அவர்களுக்கும் சந்தோஷம்! கற்பனைச் சித்திரம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக