வினவு
கேட்பாரற்று கைவிடப்பட்டிருந்த இப்பிரச்சினையை, இதன் அரசியல்
முக்கியத்துவம் கருதி நாங்கள் எடுத்துக் கொண்டோம். இதில் போராடுவதற்கும்
வெற்றி பெறுவதற்கும் உழைப்பு மட்டும் போதுமானதல்ல, நிதியும் வேண்டும்.
30.1.2013 அன்று சென்னை மெமோரியல் ஹால் அருகில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது ஆற்றப்பட்ட உரைகளை கீழே தொகுத்து தந்திருக்கிறோம்.பணத்தை மணியார்டர், காசோலை, வரைவோலைகளின் மூலம் KANNAIAN RAMADOSS , CHENNAI என்ற பெயருக்கு எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்:
2006 ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்காலத்தில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயிற்றுவிக்கப்பட்ட 206 மாணவர்களை, அர்ச்சகர்களாக நியமிக்க கூடாது என்று மதுரை மீனாட்சியம்மன் கோயில் பார்ப்பன அரச்சகர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கின்றனர்.
திமுக ஆட்சிக்காலத்தில் வழக்கை நடத்தக்கூடாது என்று வேண்டுமென்றே இழுத்தடித்தனர். திமுக அரசும் நடத்துவதில் தீவிரம் காட்டவில்லை. இப்போது அம்மா ஆட்சி வந்துவிட்டது.
பார்ப்பன அர்ச்சகர்களுடன் பேசி சுமுகமாக ஒரு தீர்வு காண இருப்பதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியது. சுமுகத்தீர்வு என்பதன் பொருள் என்னவென்றால், சீரங்கம், மதுரை, மயிலை உள்ளிட்ட ஆகம விதிப்படி அமைந்த கோயில்களில் பயிற்சி பெற்ற பார்ப்பனரல்லாத மாணவர்களை நியமிக்காமல், அவர்களுக்கு மற்ற மாரியாத்தா, காளியாத்தா கோயில்களை ஒதுக்கிவிடுவது என்பதே. இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பயிற்சி முடித்த மாணவர்களை தொடர்பு கொண்டு, வழக்கெல்லாம் வேண்டாம், வேலை போட்டுத் தருகிறோம் என்று ஆசை காட்டத் தொடங்கியிருக்கின்றனர்.
இந்த வழக்கில் வாதி (petitioner) மதுரைக் கோயில் அர்ச்சகர்கள்; பிரதிவாதி (Respondent) தமிழக அரசு. இதில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் தலையீடு செய்து தன்னையும் வழக்கில் சேர்த்துக் கொண்டிருக்கிறது. வழக்கை மனித உரிமைப் பதுகாப்பு மையம் நடத்துகிறது
ஜனவரி 30 ஆம் தேதியன்று வழக்கின் இறுதி விசாரணை தொடங்கிவிட்டது. பார்ப்பன அர்ச்சகர்கள் சார்பில் வழக்குரைஞர் பராசரன் தனது வாதுரைகளை முன்வைக்கத் தொடங்கி விட்டார். தமிழக அரசின் சார்பில், அம்மாவின் வழக்குகளுக்கு ஆஜராகும் பி.பி.ராவ் என்ற மூத்த வழக்குரைஞர் நியமிக்கப்பட்டிருக்கிறார். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் மூத்த வழக்குரைஞர் காலின் கன்சால்வேஸ் ஆஜராகிறார்.
சம்பிரதாயமா, மதச்சார்பற்ற சட்டமா (ceremonial law or secular law) என்றால் சம்பிரதாயமே மேல்நிலை வகிக்கும். இதுதான் அரசியல் சட்டத்தின் நிலை. திமுக அரசு போட்டிருக்கும் அரசாணை, உரிய சட்டத்தின் துணை இல்லாமல் போடப்பட்டிருப்பதால் அது செல்லத்தக்கதல்லை. அவ்வாறு ஒரு சட்டமியற்ற முடிந்தால் இயற்றிக் காட்டட்டும், நான் உடைத்துக் காட்டுகிறேன். அது அரசியல் சட்டம் வழங்கும் மத உரிமைக்கு எதிரானது. எனவே செல்லத்தக்கதல்ல” என்று கூறி தனது வாதத்தை தொடங்கியிருக்கிறார் பராசரன்.
அரசியல் சட்டத்தின் பிரிவு 25, 26 இன் கீழ் தம.து சாதி உரிமையையே இந்து மத உரிமையாக கோருகின்றனர் பார்ப்பனர்கள். அதாவது, சமூக நடவடிக்கைகளில் குற்றமாக்கப்பட்ட தீண்டாமையை, மத ரீதியில் தமது உரிமை என்று கூறுகின்றனர்.
மிகவும் கடினமான சவாலான இந்த வழக்கை பெரிதும் கஷ்டப்பட்டு இறுதி நிலைக்கு தள்ளிக் கொண்டு வந்திருக்கிறோம். வலிமையான முன்னணி வழக்குரைஞர்கள் பட்டாளம் ஒன்றை நிறுத்தி நடத்தப்பட வேண்டிய அளவுக்கு சிக்கலான சவாலான வழக்கு இது.
அப்படிப்பட்ட வழக்குரைஞர்களை நியமிக்க வேண்டுமானால், நமது தரப்பில் நியமிக்க வேண்டுமானால் பல இலட்சங்கள் தேவை. அது எமது சக்திக்கு அப்பாற்பட்டது. வாய்தாக்களுக்கு அலைந்தும், வாய்தாவை ஆட்சேபிக்க அமர்த்தப்படும் வழக்குரைஞர்களுக்கு கட்டணம் கொடுத்துமே சில இலட்சங்கள் போய் விட்டன.
இந்து சட்டத்தின் மோசடித்தன்மையை, இந்த நாட்டின் போலி மதச்சார்பின்மையை அம்பலப் படுத்துகின்ற வாய்ப்புகளை கொண்ட வழக்கு இது. கேட்பாரற்று கைவிடப்பட்டிருந்த இப்பிரச்சினையை, இதன் அரசியல் முக்கியத்துவம் கருதி நாங்கள் எடுத்துக் கொண்டோம். இதில் போராடுவதற்கும் வெற்றி பெறுவதற்கும் உழைப்பு மட்டும் போதுமானதல்ல, நிதியும் வேண்டும்.
இவ்வழக்குக்கு நன்கொடை தாருங்கள் என்று கோருகிறோம். நன்கொடையை அளிக்க விரும்புகிறவர்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
KANNAIAN RAMADOSS
PUTHIYA KALACHARAM,
NO.16, MULLAI NAGAR SHOPPING COMPLEX,
SECOND AVENUE, ASHOK NAGAR, CHENNAI, 600 083.
PHONE:044- 23718706.
செல்பேசி: அலுவலக நிர்வாகி தோழர் பாண்டியன் – 99411 75876
நெட்பாங்க் மூலம் அனுப்ப விரும்புகிறவர்கள் கீழ்க்கண்ட கணக்கிற்கு பணம் அனுப்பிவிட்டு விவரத்தை மின்னஞ்சல் அல்லது தபால் அல்லது தொலைபேசி மூலம் தெரிவிக்கவும்.
Name: KANNAIAN RAMADOSS
Bank Name: ICICI BANK LTD
Account Number: 612801107389
IFSC Code: ICIC0006128
Branch Location: TANJORE IFSC-ICIC0006128
MICR Code: NONMICRLO
Account Type: Savings
____________________________________________________
- வினவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக