விஸ்வரூபம் படத்துக்கான தடை நேற்று நீதிமன்றத்தால் விலக்கிக்
கொள்ளப்பட்ட பின்னரும், இன்று காலை படம் வெளிடப்படுவதை மாநில அரசு
தடுத்ததில் இருந்து, மாநில அரசு இந்த விவகாரத்தில் எந்தளவு முனைப்புடன்
உள்ளது என்பது தெளிவாகிறது. பக்கத்து மாநிலங்களில் விஸ்வரூபம் படம் எந்த
சட்டம் ஒழுங்கு பிரச்னையும் இன்றி காண்பிக்கப்படுகிறது.
அந்தந்த மாநில அரசுகள், தியேட்டர்களுக்கும், படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கும் பாதுகாப்பு கொடுத்து, சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துகின்றன.
இந்த நிலையில் சில தன்னார்வ அமைப்புகள், உரிமை மறுக்கப்படும் ஒரு இந்தியருக்கு, இந்தியாவில் அவர் வசிக்கும் மாநிலத்தில் அரசே எதிராக இருந்தால், மத்திய அரசு தலையிட இந்திய அரசியல் சட்டம் இடம் கொடுக்கிறதா என ஆராயத் தொடங்கியுள்ளன.
இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சை சில தன்னார்வ அமைப்புகள் அணுகியுள்ளதாகவும் தெரியவருகிறது.
இதில் மத்திய அரசு தலையிட முடியுமா என்பது, இன்றைய நீதிமன்ற தீர்ப்பின்பின் தெரியவரலாம் எனவும் சொல்லப்படுகிறது.viruviruppu

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக