சென்னை: கோமாலினி என்ற படம் கேமராவை மறைத்து வைத்து முழுபடமும் ஷூட்டிங்
நடந்தது. இதுபற்றி இயக்குனர் அரஸ் என்ற திருநாவுக்கரசு கூறியதாவது:
கோமாலினி படத்தில் குறிப்பிட்ட நடிகர், நடிகைகள் யாரும் கிடையாது. கேமராவை
மறைத்து வைத்து யதார்த்தமாக ரோட்டில் கடந்துபோகிறவர்களை அவர்களுக்கு
தெரியாமல் படம் பிடித்து அதை திரைக்கதையாக்கி, கோர்வைப்படுத்தி
படமெடுக்கும் ‘ஹிடன் கேமரா’ என்ற பாணியில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.
ஆவிகளுடன் பேசுபவர்கள் பற்றியும் படமாக்கி உள்ளோம். ஆவிகளுக்கு இதில்
முக்கிய பங்கு தந்துள்ளோம். காட்டுக்குள் வாழும் சித்தர்கள், யோகிகள்,
நம்பூதிரிகள் மற்றும் மந்திரவாதிகளின் வாழ்க்கையை இது சித்தரிக்கும்.
சுமார் ஒரு வருடம் இதன் ஷூட்டிங் நடந்தது. இப்படியொரு முயற்சி நடப்பது
இதுவே முதல்முறை. கதை, திரைக்கதை, கிளைமாக்ஸ் என்று எதுவும் இதற்காக
எழுதப்படவில்லை. ராஜேஷ் ஒளிப்பதிவு. வேத்சங்க இசை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக