தமிழகத்தின் பல பகுதிகளிலும் விஸ்வரூபம் காலை காட்சிகளில் சிக்கல்
ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் டிக்கெட் கொடுத்துவிட்டு, ரசிகர்கள் வெளியே
நிறுத்தப்பட்டிருந்தனர். சில இடங்களில் படம் தொடங்கி ஓடத் தொடங்கியபின்
இடைநிறுத்தப்பட்டது. இதனால், ரசிகர்கள் கொந்தளிப்பு நிலையை அடைந்தார்கள்.
கோவை சென்ட்ரல் தியேட்டருக்கு வெளியே ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி கலையரங்கம் தியேட்டருக்கு வெளியேயும் நிலைமை அதுவே. ஈரோடு பி.எஸ்.பி. தியேட்டரில் படம் 30 நிமிடங்கள் காண்பிக்கப்பட்ட பின், இடைநிறுத்தப்பட்டது. கோவை கலெக்டர் ஆபீஸ் முன் ரசிகர்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.
கும்பகோணம் காசி தியேட்டரில், 15 நிமிடங்கள் காண்பிக்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டது
டிக்கெட் பணம் திரும்ப கொடுக்கப்படும் என தியேட்டர் நிர்வாகம் அறிவித்த நிலையிலும், ரசிகர்கள் கலைந்து செல்லாததால், போலீஸ், பொதுமக்களை அடித்து விரட்டியது.
சென்னையில், தியேட்டர்களில் விஸ்வரூபம் பேனர்கள் அகற்றப்படுகின்றன. சில இடங்களில் பேனர்கள் எரிக்கப்பட்டுள்ளன. கூட்டமாக நின்றவர்கள் அடித்து விரட்டப்பட்டனர்.
விஸ்வரூபம் படத்தின் மீதான தடை நீக்கத்தை எதிர்த்து இன்று காலை மேல் முறையீடு செய்தது தமிழக அரசு. அரசு வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் தலமையிலான குழு காலை 10.30 மணிக்கு முதல் வழக்காக இதனை பதிவு செய்தது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தலைமை நீதிபதி எலிப்பி தர்மாராவ் தலைமையிலான பெஞ்ச், பிற்பகல் 2.30 மணிக்கு விசாரிப்பதாகக் கூறியுள்ளது.
ஆனால் தடையை நீக்கத்துக்கு தடை விதிக்கவில்லை. இதனால், படம் காண்பிக்கப்படுவதை அரசு தடுப்பது குறித்து சட்டச் சிக்கல்கள் ஏற்படலாம்.
தமிழக வரலாற்றில் ஒரு திரைப்படம் இந்தளவுக்கு பரபரப்பாக ஓடத் தொடங்கியதில்லை. கமலுக்கு ஆதரவாக ஏதாவது அரசியல் கட்சிகளோ, அல்லது மத்திய அரசு தலையீடோ இருக்குமா என்பது இன்னமும் தெரியவில்லை. viruviruppu,com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக