வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

BJP நிதின் கட்காரியிடம் வருமான வரித்துறையினர் 4 மணி நேரம் விசாரணை

நாக்பூர்: வரி ஏய்ப்பு செய்த விவகாரம் தொடர்பாக, பா.ஜ., முன்னாள் தலைவர் நிதின் கட்காரியிடம், வருமான வரித்துறை இயக்குனர் நேற்று விசாரணை நடத்தினார். இந்த விசாரணை, நான்கு மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது.
மகாராஷ்டிராவில், பா.ஜ., தலைமையிலான ஆட்சியில், 1995 முதல் 1999 வரை, பொதுப்பணித் துறை அமைச்சராக கட்காரி இருந்தபோது, ஏராளமான ஒப்பந்தங்களை, "ஐடியல் ரோடு பில்டர்ஸ்' நிறுவனம் பெற்றது.
அதற்குப் பிரதிபலனாக, கட்காரியின் நிறுவனத்தில் பெருமளவு முதலீடு செய்யப்பட்டு உள்ளதாகவும், அத்துடன் வேறு பல நிறுவனங்களும், போலி பெயரில், கட்காரி நிறுவனத்தில், பெருமளவு முதலீடு செய்துள்ளதாகவும் புகார் கூறப்பட்டது.
இதையொட்டி, நிதின் கட்காரிக்கு சொந்தமான, புர்தி மின் மற்றும் சர்க்கரை ஆலை நிறுவனத்திற்கு வந்த நிதிகள் மற்றும் அந்த நிறுவனத்தில், முதலீடு செய்த நிறுவனங்கள் குறித்த விசாரணையை, வருமான வரித்துறையினர் கடந்த சில தினங்களுக்கு முன் துவங்கினர்.அத்துடன், புர்தி மின் மற்றும் சர்க்கரை ஆலை நிறுவனத்திற்கு வந்த நிதி ஆதாரங்கள் மற்றும் அந்த நிறுவனத்தில், முதலீடு செய்த, 18 கம்பெனிகள் குறித்த விசாரணையும் நடைபெற்றது.
பல போலி நிறுவனங்கள் பெயரில், புர்தியில் முதலீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, கட்காரி மீது, வரி ஏய்ப்பு செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள கட்காரி, புர்தி நிறுவனத்திலிருந்து, தான் ஏற்கனவே விலகிவிட்டதாகத் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, நாக்பூரில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில், நேற்று நேரில் ஆஜரான நிதின் கட்காரியிடம், வருமான வரித்துறை இயக்குனர் (புலனாய்வு) கீதா ரவிச்சந்திரன், நான்கு மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தினார்.அப்போது, புர்தி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் மற்றும் அந்த நிறுவனங்களுடன் நடந்த மற்ற பரிவர்த்தனைகள் குறித்து கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 
 ndilyan - chennai,இந்தியா

தில்லுமுல்லுகள் பலவற்றை பண்ணிவிட்டு, வருமான வரி அதிகாரிகளை மிரட்டியவர் இன்று பம்முவது ஏன்? ஜெகன் மாதிரி ஜெயிலுக்கு போக கூடிய நேரம் வந்தாச்சி.  dinamalar 

கருத்துகள் இல்லை: