புதுடில்லி:""ஓய்வுக்கு பிறகு கூடுதல் மகிழ்வுடன் உள்ளேன்,'' என, "டாடா'
நிறுவனங்களின் முன்னாள் தலைவர், ரத்தன் டாடா கூறியுள்ளார்.நாட்டின் முன்னணி
தொழில் குழுமங்களில் ஒன்றான, "டாடா'வின் தலைவராக, 21 ஆண்டுகள் சிறப்பாக
பணியாற்றி, கடந்த டிச., 28ல் ஓய்வு பெற்றுள்ள ரத்தன் டாடா, 75,
கூறியுள்ளதாவது:ஓய்வுக்கு பிறகு, சில வாரங்கள் மிகுந்த மகிழ்ச்சியாக
இருந்தேன்.aவீட்டில் அதிக நேரம் இருந்தேன், செல்ல நாய்களுடன் ஆசை
தீர விளையாடினேன். இது வரை என் வாழ்க்கையில், பார்த்திராத சிறு சிறு
விஷயங்களிலும், ஆழ்ந்த கவனம் செலுத்தினேன். மகிழ்வுடன் கழிந்தன அந்த
நாட்கள்.
வரும் நாட்களிலும், அது போலவே இருப்பேன். ஏதாவது ஒரு குறிப்பிட்ட துறையில் அதிக கவனம் செலுத்த உள்ளேன். குறிப்பாக, கிராமப்புற மக்கள் மேம்பாட்டிற்காக சிறப்பு கவனம் செலுத்துவேன்.இவ்வாறு, ரத்தன் டாடா கூறினார். டாடா குழுமத்தின் தலைவராக, ரத்தன் இருந்த காலகட்டத்தில் தான், அந்த நிறுவனம், பல பன்னாட்டு நிறுவனங்களை கையகப்படுத்தியது.குறிப்பாக, ஜாக்குவார் லேண்ட் ரோவர், கோரஸ் ஸ்டீல், டெட்லி டீ போன்ற நிறுவனங்களை, டாடா கையகப்படுத்தியது, ரத்தன் டாடாவின் விருப்பத்தின் அடிப்படையிலேயே என, கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக