விஸ்வரூபம் விரைவில் வெளியாகும்' : இலங்கை தணிக்கைச் சபை - 'அல்கைதா பற்றித் தான் படம் பேசுகிறது'படத்தினை முற்றாக தடை செய்ய வேண்டும் : படத்தைப் பார்த்த இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் தீர்க்கமான முடிவு முஸ்லிம் அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக இலங்கையிலும் தமிழகத்திலும் விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடப்படவில்லை.இலங்கையில்
விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிடுவதற்கு விரைவில் அனுமதி வழங்கப்படும்
என்று இலங்கையில் வெளியாகும் திரைப்படங்களுக்கு அனுமதி வழங்கும் தணிக்கைச்
சபை தெரிவித்துள்ளது.எந்தவொரு
சமூகத்துக்கும் பாதிப்பு ஏற்படக்கூடிய கருத்துக்கள் அந்தப் படத்தில் இல்லை
என்று தாங்கள் கருதுவதாகவும் இலங்கை தணிக்கைச் சபையின் தலைவர் காமினி
சுமனசேகர பிபிசியிடம் தெரிவித்தார்.
'இந்த நாட்டில் இந்தப் படத்தை வெளியிடுவதில் தடைகள் ஏதும் இருக்காது என்றுதான் நாங்கள் கருதுகின்றோம். ஏனென்றால் இந்தப் படத்தில் எந்தவொரு மதத்தவர்களுக்கோ இனக்குழுக்களுக்கோ அநீதி ஏற்படுத்தும் விதத்தில் ஏதும் இல்லை என்பதுதான் எமது கருத்து' என்று பிபிசியிடம் கூறினார் இலங்கை தணிக்கைச் சபை தலைவர்.
படத்தில் ஆட்களைக் கொல்லுகின்ற வன்முறைக் காட்சிகள் உள்ளதாகவும் அவற்றை நீக்கிவிட்டே படத்தை வெளியிடத் தீர்மானத்துள்ளதாகவும் இலங்கை தணிக்கைச் சபை கூறுகிறது.
இந்தியாவில் விஸ்வரூபம் படம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதனாலும் இலங்கையில் உள்ள சில முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததாலும் படத்தை வெளியிடாமல் நிறுத்தி வைத்ததாக காமினி சுமனசேகர தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக