புதுடில்லி : பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு, கடுமையான தண்டனை வழங்க
வகை செய்யும் அவசர சட்டத்துக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.டில்லியில்,
ஓடும் பேருந்தில், மருத்துவக் கல்லூரி மாணவி, பாலியல் பலாத்காரம்
செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். நாட்டையே, உலுக்கிய இந்த அதிர்ச்சி
சம்பவத்துக்கு, நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.இதையடுத்து,
சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி, ஜே.எஸ்.வர்மா தலைமையில், இமாச்சல்
பிரதேச ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி, லீலா சேத், முன்னாள் சொலிசிட்டர்
ஜெனரல், கோபால் சுப்ரமணியம் ஆகிய, மூன்று பேர் அடங்கிய குழு
அமைக்கப்பட்டது.பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, மேற்கொள்ள வேண்டிய
நடைமுறைகள், பாலியல் வன்முறையை தடுக்க தேவையான சட்டங்கள், பெண்களின்
பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து, இந்த குழு, ஆய்வு செய்து, 200
பக்கங்களை உடைய அறிக்கையை, உள்துறை அமைச்சகத்திடம், பரிந்துரையாக, கடந்த,
23ம் தேதி அளித்தது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு, தூக்கு
தண்டனை வழங்குவது உட்பட, பல்வேறு பரிந்துரைகள் அளிக்கப்பட்டு இருந்தன.சாதாரண ஆண்கள் சும்மா தான் இருகின்றனர். இமாதிரி செயலில் இடுபடுபவர்கள் பண
பலம், படை பலம் உள்ளவர் அல்லது எதற்கும் துணிந்தவர்கள் இவர்களிடம் சட்டம்
செல்லுமா அல்லது சேவகம் செய்யுமா? . dinamalar.com
இந்த பரிந்துரைகளை அமல்படுத்துவது பற்றி, அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என, நீதிபதி வர்மாவுக்கு, பிரதமர் மன்மோகன் சிங் சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார்.இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், மத்திய அமைச்சரவையின் அவசர கூட்டம், நேற்று நடந்தது. இரண்டு மணி நேரம் நடந்த கூட்டத்தில், வர்மா கமிஷன் அறிக்கை பரிந்துரை குறித்தும், அவசர சட்டம் கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.பின், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு, கடுமையான தண்டனை வழங்க வகை செய்யும் அவசர சட்டத்திற்கு, ஒப்புதல் அளிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.இந்த அவசர சட்டத்தை, நாளை மறுநாள் மத்திய அரசு வெளியிடும் என, தெரிகிறது.மிக கொடூரமான பலாத்கார குற்றத்திற்கு, தூக்கு தண்டனை, பலாத்கார குற்றத்துக்கு, 20 ஆண்டுகள் வரை தண்டனை அளிக்கும் வகையில், அவசர சட்டத்தில் வகை செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக