Viruvirupu
CNN IBN ஆசிரியர் ராஜ்தீப் சர்தேசாய்க்கு வழங்கிய பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டார் சோ.
“தமிழக அரசு விஸ்வரூபம் படத்தை தடை செய்தது சரிதான். இப்படிதான் செய்ய முடியும். ஒரு திரைப்படத்துக்காக மாநில அரசு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவதை பொறுத்துக்கொள்ள முடியாது” என்றும் கூறியுள்ளார் அவர்.
ராஜ்தீப் சர்தேசாய், “அரசு எதற்காக எதிர்ப்பு தெரிவிக்கும் குழுக்களின் சார்பாக செயல்படுகிறது, கமல்ஹாசன் பக்கம் என்ன நியாயம் உள்ளது என்பதை பார்க்கவில்லை?” என்று கேள்வி எழுப்பியபோது சோ, “பொதுமக்கள் நலன் உள்ள திசையிலேயே முதல்வர் ஜெயலலிதா நின்றார். ஒரு படம் சிலரது நம்பிக்கைகளை தகர்க்கும் என்றால், அந்தப் படம் தடை செய்யப்படத்தான் வேண்டும்” என்றார்.
எமக்கு இருப்பது, ஒரேயொரு கேள்விதான். மத்திய தணிக்கை சபையோ, உயர் நீதிமன்றமோ ஏன் அவ்வாறு நினைக்கவில்லை? ஒருவேளை உயர் நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றமோ, படத்துக்கு தடை விதித்தது செல்லாது என தீர்ப்பு வழங்கினால், சோ என்ன சொல்லுவார்?
“எல்லோரும் தப்பு. தமிழக அரசுதான் ரைட்டு” என்பாரோ! கம்யுனிஸ்ட் கட்சி பாண்டியனுக்கும் சோவுக்கும் இடையில் கடும் போட்டி ஆரம்பமாகிவிட்டது கால் கழுவுவோம் வாரீர்
மூத்த அரசியல் விமர்சகரும், முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசகர்களில் ஒருவர்
என்று கூறப்படுபவருமான சோ (ராமசாமி), விஸ்வரூபம் தொடர்பாக தமது கருத்தை
தெரிவித்துள்ளார். அவரது கருத்து, “தமிழக அரசு செய்தது சரியே… படம் தடை
செய்யப்பட வேண்டியதுதான்” என்பதே!
CNN IBN ஆசிரியர் ராஜ்தீப் சர்தேசாய்க்கு வழங்கிய பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டார் சோ.
“தமிழக அரசு விஸ்வரூபம் படத்தை தடை செய்தது சரிதான். இப்படிதான் செய்ய முடியும். ஒரு திரைப்படத்துக்காக மாநில அரசு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவதை பொறுத்துக்கொள்ள முடியாது” என்றும் கூறியுள்ளார் அவர்.
ராஜ்தீப் சர்தேசாய், “அரசு எதற்காக எதிர்ப்பு தெரிவிக்கும் குழுக்களின் சார்பாக செயல்படுகிறது, கமல்ஹாசன் பக்கம் என்ன நியாயம் உள்ளது என்பதை பார்க்கவில்லை?” என்று கேள்வி எழுப்பியபோது சோ, “பொதுமக்கள் நலன் உள்ள திசையிலேயே முதல்வர் ஜெயலலிதா நின்றார். ஒரு படம் சிலரது நம்பிக்கைகளை தகர்க்கும் என்றால், அந்தப் படம் தடை செய்யப்படத்தான் வேண்டும்” என்றார்.
எமக்கு இருப்பது, ஒரேயொரு கேள்விதான். மத்திய தணிக்கை சபையோ, உயர் நீதிமன்றமோ ஏன் அவ்வாறு நினைக்கவில்லை? ஒருவேளை உயர் நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றமோ, படத்துக்கு தடை விதித்தது செல்லாது என தீர்ப்பு வழங்கினால், சோ என்ன சொல்லுவார்?
“எல்லோரும் தப்பு. தமிழக அரசுதான் ரைட்டு” என்பாரோ! கம்யுனிஸ்ட் கட்சி பாண்டியனுக்கும் சோவுக்கும் இடையில் கடும் போட்டி ஆரம்பமாகிவிட்டது கால் கழுவுவோம் வாரீர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக