தற்போது நடைபெறும் விஸ்வரூபம் விசாரணையில், கமல் தரப்பிடம், “விஸ்வரூபம்
படத்தில் 26 நிமிடங்கள், 23 செக்கன்டுகள் இடம்பெறும் காட்சிகளை வெட்ட
முடியுமா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டதாக தெரிகிறது.
விசாரணை தொடங்கும் முன்னர் சேம்பருக்கு வெளியே வைத்தே இந்த கேள்வி கேட்கப்பட்டதாக சொல்கிறார்கள்.
இப்படியொரு கேள்வி விழுப்பப்பட்ட காரணம், விசாரணையில் இதே கோரிக்கை வந்தால், கமல் தரப்பு அதற்கான பதிலுடன் தயாராக இருக்க வேண்டும் என்பதே.
அதேநேரத்தில், இந்த 26 நிமிடங்கள், 23 செக்கன்டுகள் இடம்பெறும் காட்சிகள் எவை என்று தெரிவித்ததாகவோ, பட்டியல் கொடுக்கப்பட்டதாகவோ தெரியவில்லை.
தற்போது நடைபெறும் விஸ்வரூபம் விசாரணையில், கமல் தரப்பு வக்கீல் தனது வாதத்தில், “விஸ்வரூபம் படத்தில் ஒரேயொரு இந்திய முஸ்லீம் கதாபாத்திரம்தான் உள்ளது.
அந்த கதாபாத்திரம், படத்தின் கதாநாயகன் கமல்தான். இந்த பாத்திரம் நல்லவர் என்றே சித்தரிக்கப்பட்டுள்ளது.
படத்தில் இடம்பெறும் மற்றைய முஸ்லீம் கதாபாத்திரங்கள் அனைவரும், ஆப்கானிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பினர்.
அந்த தீவிரவாத இயக்கத்தை (தலிபான்) பயங்கரவாத இயக்கமாக ஐ.நா. பிரகடனம் செய்துள்ளது. அப்படியான நிலையில், அவர்களை வேறு எப்படி காட்ட முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.
விசாரணையில், இந்தக் கருத்து கமல் தரப்புக்கு சாதகமான கருத்தாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக