கெளகாத்தி ஐஐடியில் உதவி பேராசிரியாக இருக்கும் தர்மலிங்கம் உதயகுமார் என்பவர் இந்திய ரூபாய்க்கான கரன்சி வடிவத்தை அமைத்தார். 2010ம் ஆண்டு முதல் இது அமலுக்கு வந்தது. இதுதான் இப்போது புயலை கிளப்பியுள்ளது.
வாஸ்து சாஸ்திரத்தில் வடிவங்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டாம். இந்திய ரூபாயில் உள்ள சின்னம் ஆர் என்ற ரோமானிய எண் மற்றும் தேவநகரி மொழி கலந்த வடிவமாக உள்ளது. இதன் நடுவே இருக்கும் கோடு வாஸ்து சாஸ்திரப்படி கழுத்தை அறுக்கும் கத்தி போல இருக்கிறதாம். அது ரூபாயை வெட்டிச் செல்வது போல இருப்பதால் பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைகிறது என்று கூறியுள்ளார் நிபுணர்.
இந்த சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டபோதே இதுபற்றி மத்திய அரசுக்கு அவர் கடிதம் எழுதியிருக்கிறாராம். ஆனால் மத்திய அரசுதான் இதை கண்டு கொள்ளாமல் விட்டதாம்.
2009ம் ஆண்டு ஏற்பட்ட சர்வதேச நிதி நெருக்கடி நிலையிலும், இதுபோல் பல்வேறு சூழ்நிலைகளிலும் ரூபாயின் மதிப்பு சரிந்ததில்லை. ஆனால் 2010ம் ஆண்டு ரூபாய் சின்னம் அறிமுகமாக காலத்தில் இருந்தே இந்திய ரூபாயின் மதிப்பு கண்டபடி சரிய ஆரம்பித்து விட்டதாகவும் வாஸ்து நிபுணர் கூறியுள்ளார்.
இவரின் கருத்து பதில் கூறியுள்ள சில நிபுணர்கள் வாஸ்து என்பது ஒரு அறிவியல் கட்டிடங்களுக்கு வாஸ்துவின் வடிவம் பார்க்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக