புதன், 20 ஜூன், 2012

FEFSI ஃபெப்சி தலைவரானார் அமீர்! விசு தோல்வி


 மிழ் சினிமாவின் பலமிக்க தொழிலாளர் அமைப்பான ஃபெப்சியியின் தலைவராக இயக்குநர் அமீர் தேர்தெடுக்கப்படுள்ளார்.
ஃபெப்சி தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து பேச, ஊதியக் குழுத் தலைவராக சில மாதங்களுக்கு முன் இயக்குநர் அமீர் நியமிக்கப்பட்டார். இந்தப் பேச்சுவார்த்தையின் போதுதான் பெரிய பிரச்சினை ஏற்பட்டது. 
தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக இருந்து கொண்டே, தொழிலாளர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார் அமீர் என்று தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டினர். மேலும் தொழிலாளர்களை தனது தனிப்பட்ட பகையைத் தீர்த்துக் கொள்ளப் பயன்படுத்துவதாகக் கூறி அமீர் மீது தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை மேற்கொண்டது. 

இந்த பிரச்சனைகளால் பாரதிராஜா படத்தில் இருந்து அமீர் நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, அமீர் சிறிது நாட்கள் அமைதிகாத்தார். இன்னொரு பக்கம், இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கம் இரண்டாக உடைந்து, பல்வேறு சட்டச் சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. இந்த களேபரங்களால் ஊதிய சீரமைப்பு விவகாரம் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.

இந்த நிலையில் ஃபெப்சிக்கு இன்று (19.06.2012) தேர்தல் நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இயக்குனர் அமீர் வெற்றிபெற்றுள்ளார்.

கருத்துகள் இல்லை: