கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்
காங்கிரஸ் சார்பில் கோபிநாத் போட்டியிட்டார்.
இவரை ஆதரித்து
நடிகர் சிரஞ்சீவி பாகலூரில் பிரச்சாரம் செய்தார். அப்போது அரசாங்க
அதிகாரி களை மீறி கூட்டம் கூட்டியதாகவோ, வாகனங்கள் அதிகம்
வைத்திருந்ததாகவோ சிரஞ் சீவி, கோபிநாத் உட்பட 6 பேர் மீது தேர்தல்
அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் 4
பேர் சம்மனை பெற்றுக்கொண்டு கோர்ட்டில் ஆஜரானார்கள். எம்.எல்.ஏ.
கோபிநாத்தும், சிரஞ்சீவியும் சம்மனையும் வாங்கவில்லை. கோர்ட்டிலும்
ஆஜராகவில்லை. இதனால் நீதிபதி கெஜராஜ், கோர்ட்டை மதிக்காமல் சம்மனை
வாங்காத குற்றத்திற்காக கோபிநாத்தும், சிரஞ் சீவியும் தேடப்படும்
குற்றவாளிகள் என்று கைது வாரண்ட் கொடுத்திருக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக