திங்கள், 18 ஜூன், 2012

தேர்தல் சமயத்தில் கைதானதே ஜெகன் வெற்றிக்கு

காங்கிரசின் முட்டாள்  ராஜதந்திரத்தால் வெறும் பலூனை பூதமாகி விட்டார்கள் இனி படிக்கட்டும் பாடம் 
தேர்தல் சமயத்தில் கைதானதே ஜெகன் வெற்றிக்கு காரணம்: தெலுங்கு தேசம் கருத்து
இடைத்தேர்தல் நேரத்தில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகனை கைது செய்து சிறையில் அடைத்தது மக்கள் மத்தியில் அவருக்கு அனுதாபத்தை ஏற்படுத்திவிட்டது. அதன் மூலம் அவர் வெற்றி பெற்றுவிட்டார் என்று தெலுங்கு தேசம் தெரிவித்துள்ளது.
ஆந்திராவில் கடந்த 12ம் தேதி நடந்த 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 15 தொகுதியை ஜெகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கைப்பற்றியது. 2 இடங்களில் காங்கிரசும், 1 ஒரு இடத்தில் டிஆர்எஸ்சும் வெற்றி பெற்றன. முக்கிய எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் ஒரு இடத்தை கூட பெறாமல் படுதோல்வி அடைந்தது. காங்கிரசின் முட்டாள்  ராஜதந்திரத்தால் வெறும் பலூனை பூதமாகி விட்டார்கள் இனி படிக்கட்டும் பாடம் 


இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து முடிவெடுக்க தெலுங்கு தேசம் கட்சியின் செயற்குழு கூட்டம் ஐதராபாத்தில் நடந்தது. கூட்டத்துக்கு பிறகு அக்கட்சியின் நாடாளுமன்ற தலைவர் நாமா நாகேஸ்வர ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:
நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது தொடர்பாக மற்ற கட்சிகளுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும். நாளை மறுதினம் தெலுங்கு தேசம் முடிவை அறிவிக்கும். ஆந்திராவில் இடைத்தேர்தல் முடிவுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. தேர்தல் நேரத்தில் ஜெகன் கைது செய்யப்பட்டது மக்கள் மத்தியில் அவருக்கு அனுதாபத்தை ஏற்படுத்திவிட்டது. அதன்மூலம் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்று விட்டது. மக்களிடத்தில் ஜெகன் அனுதாபத்தை சம்பாதிக்க காங்கிரசே காரணமாகி விட்டது.
நாளை முதல் தொகுதிவாரியாக தேர்தல் முடிவுகள் குறித்து தெலுங்கு தேசம் ஆய்வு செய்ய உள்ளது. அதன்பிறகு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை: