திங்கள், 18 ஜூன், 2012

அம்மாவின் கைக்குள் அடைக்கலமான அத்வானி

ஜெயலலிதா ‘விஷ் லிஸ்ட்’, அத்வானிக்கு கட்சிக்குள் ஏற்படுத்திய சிக்கல்!

Viruvirupu
ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று அறிவிப்பதில் பா.ஜ.க. கடும் சிக்கலில் உள்ளது. நேற்று நடைபெற்ற அக் கட்சியின் உயர்நிலைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என அக்கட்சியில் நேற்று மதியம்வரை அடித்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால், அவர்கள் நேற்று மாலை நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படவில்லை என்பதை விடுங்கள், குழப்பம் காரணமாக கூட்டமே பாதியில் குழம்பி, கலைந்து போனது. ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற கேள்விக்கு மத்தியில் பிரதான எதிர்க்கட்சியாகவுள்ள பா.ஜ.க.-வால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.
என்னங்க இது புதுசா? 
நேற்று மாலை டில்லியில் நடைபெற்ற பா.ஜ.க. உயர்நிலைக் கூட்டத்தில், மூன்று பிரிவாகப் பிரிந்து ஒவ்வொரு திசையில் இழுத்தார்கள் என்று தெரிய வருகிறது.
பிரணாப் முகர்ஜியா, அப்துல் கலாமா, சங்மாவா என்பதே மூன்று திசை இழுவல். இதில் அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ள மகா சோகம் என்னவென்றால், யாராவது ஒருவரை ஆதரிக்க போய், கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு விடலாம் என்ற நிலை ஏற்பட்டிருப்பதுதான்.
கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, ஆச்சரியகரமாக, “சங்மாவை ஆதரிக்கலாம்” என்று நேற்றைய கூட்டத்தில் தெரிவித்ததாக சொல்கிறார்கள். அத்வானியிடம் இருந்து இப்படியொரு ஐடியாவை யாரும் எதிர்பார்க்கவில்லை என கட்சி வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள். இறுதிவரை அத்வானி, அந்த ஸ்டான்டில் இருந்து இறங்கி வரவேயில்லை என்றும் கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் அத்வானியின் ‘சங்மா ஆதரவு’ நிலைப்பாடுதான், கூட்டம் பாதியில் முடிந்து போனதற்கு காரணம் என்றும் சொல்கிறார்கள்.
டில்லியில் அத்வானி ஆதரவு சர்க்கிளில் ஒருவருடன் பேசியபோது, “அவர் (அத்வானி) சில அரசியல் நலன்களுக்காகவே சங்மாவை ஆதரிக்க நினைக்கிறார். ஆனால், அவரை எதிர்ப்பவர்கள் உணர்ச்சி வசப்பட்ட ஆட்களாக இருக்கிறார்கள். வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து அத்வானி காய் நகர்த்துகிறார். அவரை எதிர்ப்பவர்களோ, ஜனாதிபதி தேர்தலை மட்டும் பார்ப்பவர்களாக உள்ளார்கள்” என்றார்.
இதில் ஒரு முக்கிய சமாச்சாரம் என்ன தெரியுமா? அத்வானியிடன் சங்மாவுக்கு வெளிப்படையாக ஆதரவு கேட்ட ஒரேயொரு தலைவர் ஜெயலலிதாதான். கடந்த வாரம் சென்னை வந்த அத்வானி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஜனாதிபதி தேர்தல் குறித்து விவாதித்தார். அப்போது ஜெயலலிதா, சங்மாவை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அந்த நேரத்தில் அத்வானி ஏதும் பிடிகொடுத்து பேசவில்லை என்பதே உண்மை. ஜெயலலிதாவின் கோரிக்கைக்கு, “பா.ஜ.க. கூட்டணி சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்துவது குறித்து ஆலோசிக்கிறோம். கூட்டணித் தலைவர்கள் அதுகுறித்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள்” என மறைமுகமாக ஒரு ஹின்ட் கொடுத்திருந்தார்.
“நீங்கள் இன்னமும் எமது கூட்டணிக் கட்சியாக இல்லையே” என்பதுதான், அத்வானி ஜெயலலிதாவுக்கு கொடுத்த ஹின்ட்.
இப்போது திடீரென, ஜெயலலிதா ஆதரவு கோரிய சங்மாவுக்கு ஆதரவாக அத்வானி குரல் கொடுக்கத் துவங்கியிருப்பது, தமிழகத்தையும் மனதில் வைத்துதான் என்றுகூட கருதலாம்

கருத்துகள் இல்லை: