சினிமா ரசிகர்கள் இப்போது விவாதித்து வரும் சூடான தலைப்பே அஜித் நடிக்கும் பில்லா2 படத்தின் ரிலீஸ் தேதியைப் ற்றித் தான். தல ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தும் விதமாக பில்லா2 படம் ரிலீஸ் தள்ளிவைத்தபடியே இருக்கிறது.
அஜீத் நடித்த 'பில்லா-2' படத்துக்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் படத்திற்கு 'யூ/ஏ' சான்றிதழ் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் படத்தை மும்பையில் உள்ள மேல் முறையீட்டு குழுவுக்கு அனுப்பியுள்ளனர்'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்டால், அப்படத்தை 18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே (அடட்ல்ட்ஸ்) பார்க்கவேண்டும். யூ/ஏ சான்றிதழ் கிடைத்தால் 12 வயதுக்கு மேற்பட்டோரிலிருந்து இப்படத்தை பார்க்கலாம் என விதிமுறைகள் உள்ளன. அஜித்குமார் இப்படத்தில் தாதாவாக நடிக்க, பார்வதி ஓமனகுட்டன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை சக்ரிடோலட்டி இயக்கியுள்ளார். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.சாதாரண இளைஞன் ரவுடிகளின் தொல்லைகளுக்கு ஆளாகி பயங்கர தாதாவாக உருவாவதே கதை. இப்படத்தில் வன்முறை மற்றும் கவர்ச்சி காட்சிகள் அதிகம் இருப்பதாக தணிக்கை குழுவினர் அவற்றை வெட்டி எறிய முயற்சித்தனர். ஆனால் இயக்குனர் சம்மதிக்கவில்லை. இதனால் தணிக்கை குழுவினர் இப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் அளித்தனர்.இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால் இப்படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை முதல் வாரத்திற்குதள்ளிவைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக