புதன், 20 ஜூன், 2012

கேள்வி கேட்டு வாய் நீளம் காட்டியவர்கள் எல்லாம் இன்று...! கலைஞர் அறிக்கை!

 திமுக ஆட்சியின்போது கேள்வி கேட்டு வாய் நீளம் காட்டியவர்கள்(வைகோ சீமான் நெடுமாறன் பாண்டியன் போன்ற ஜால்ராக்கள்) எல்லாம் இன்று கேளாக்காதினராயும், வாய் மூடி மௌனிகளாயும் மாறி விட்டார்கள்.
கேள்வி: ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்து விட்டதாகச் செய்தி வந்திருக்கிறதே?

கலைஞர்: கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். நமது மீனவர்களின் பிரச்சினை குறித்து மத்திய அரசுக்கு எத்தனையோ முறை நாம் வேண்டுகோள் விடுத்தும், அவர்களும் முயற்சித்துப் பலமுறை பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் நின்றபாடில்லை. இந்தச் சம்பவம் தி.மு.கழகம் ஆட்சியிலே இருந்தபோது நடைபெற்றிருந்தால், இந்நேரம் எத்தனை கண்டன அறிக்கைகள் வெளிவந்திருக்கும் என்பதைத் தான் நினைத்துப் பார்க்கிறேன். மாநில அரசு என்று ஒன்று இருக்கிறதா? என்ன செய் கிறார்கள்? ஏன் பதவியை ராஜினாமா செய்ய வில்லை? மத்திய அரசிலிருந்து விலக வேண்டியதுதானே? என்றெல்லாம் அடுக்கடுக்காக கேள்விக்கணைகளைத் தொடுத்திருப்பார்கள்.ஆனால் தற்போது ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தது பற்றி வாயே திறக்கவில்லை! திமுக ஆட்சியின்போது கேள்வி கேட்டு வாய் நீளம் காட்டியவர்கள்(வைகோ சீமான் நெடுமாறன் பாண்டியன் போன்ற ஜால்ராக்கள்) எல்லாம் இன்று கேளாக்காதினராயும், வாய் மூடி மௌனிகளாயும் மாறி விட்டார்கள்.

கருத்துகள் இல்லை: