வியாழன், 21 ஜூன், 2012

பா.ஜ.க. சங்மாவுக்கு ஆதரவு! (கூட்டணிக்கு திருவோடு!!)

Viruvirupu,
அப்பாடா.. ஒருவழியாக பா.ஜ.க., ஜனாதிபதி வேட்பாளராக யாரை ஆதரிப்பது என முடிவு எடுத்து விட்டது. பி.ஏ.சங்மாவை ஆதரிக்கப் போவதாக அக்கட்சியின் மூத்த தலைவரான சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்துள்ளார். இங்கு ஒரு விஷயத்தைக் கவனியுங்கள். பாரதீய ஜனதா கட்சிதான் சங்மாவை ஆதரிக்கப் போவதாக அறிவித்திருக்கிறதே தவிர, பா.ஜ.க. கூட்டணி அல்ல.
பா.ஜ.க.-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்கள் கடந்த சில தினங்களாக பேசு பேசு என தமக்கிடையே பேசியும், ஒருமித்த முடிவு ஒன்றை எட்ட முடியவில்லை.
பேசாம விஜயகாந்த் கட்சில சேர்ந்திருக்கலாமோ!
எனவே, பா.ஜ.க. தாம் மட்டும் சங்மாவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் விஷயத்திலேயே ஒற்றுமையாக செயல்பட முடியாத இவர்கள், எப்படி ஒற்றுமையாக லோக்சபா தேர்தலை சந்திப்பார்கள் என்பது வேறு விஷயம்.
சுஷ்மா ஸ்வராஜ் கூறியதாவது:என்ன சொல்கிறார்? “காங்கிரஸ் கூட்டணி (ஐக்கிய முற்போக்குக் கூட்டணி) தமது வேட்பாளரை அறிவிக்கும் முன் எம்மை கலந்து ஆலோசிக்கவில்லை. அப்படி அவர்கள் செய்திருந்தால், அது ஆரோக்கியமான நடைமுறையாக இருந்திருக்கும். நாமும் அவர்களது வேட்பாளரை ஆதரித்திருப்போம்.
இப்படி ஆரோக்கியமான முறையில் செயல்படாமல், காங்கிரஸ் கட்சி தன்னிச்சையாக செயல்பட்டதால், நாம் அவர்களுக்கு எதிரான வேட்பாளரை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம். எங்களைப் பொறுத்தவரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜி, அவ்வளவு சுலபமாக ஜெயித்துவிட முடியாதபடி, கடும் எதிர்ப்பு கொடுப்போம்” என்கிறார்.
நன்றாகக் கவனியுங்கள்.. “பிரணாப்பை தோற்கடிப்போம்” என்றோ, “சங்மாவை ஜெயிக்க வைப்போம்” என்றோ, சுஷ்மா ஸ்வராஜ் கூறவில்லை.

கருத்துகள் இல்லை: