திங்கள், 18 ஜூன், 2012

களமிறக்கப்படுகிறார் கலாம். வேட்பாளராக அறிவிக்கிறார் மமதா

 Mamata Banerjee Likely To Issue Whip To Support Kalam
கொல்கத்தா: குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமை தமது வேட்பாளராக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி இன்று மாலை முறைப்படி அறிவிக்க உள்ளதாக தெரிகிறது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜியை காங்கிரஸ் நிறுத்த முடிவு செய்ததற்கு மமதா பானர்ஜி கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். பினன்ர் முலாயம்சிங்குடன் இணைந்து மன்மோகன்சிங், அப்துல்கலாம் அல்லது சோம்நாத் சட்டர்ஜியை வேட்பாளராக நிறுத்தலாம் என்று கூறியிருந்தார். அதேநேரத்தில் பிரணாப் முகர்ஜியை காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. திடீரென முலாயம்சிங் யாதவும் பிரணாப்பை ஆதரிப்பதாக அறிவித்துவிட மமதாவோ கலாம்தான் வேட்பாளர் என்று திட்டவட்டமாக இருந்தார். அத்துடன் ஃபேஸ்புக் மூலமாகவும் ஆதரவைத் திரட்டும் முயற்சிகளை மேற்கொண்டார்.

இந்நிலையில் இன்று மாலை திரிணாமுல் காங்கிரஸின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அப்துல்கலாமை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்துவது பற்றி விவாதிக்கபப்ட்டு கூட்டத்தின் முடிவில் முறைப்படி அறிவிக்கப்பட உள்ளது. மேலும் கலாமுக்கு மட்டுமே திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பிக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற வகையிலான கொறாடா உத்தரவும் போடப்பட உள்ளது.
முலாயம் மீது காட்டம்
இதனிடையே ஃபேஸ்புக்கில் காங்கிரஸ் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை முலாயம்சிங் ஆதரிப்பது பற்றிய விமர்சனத்தைப் பதிவு செய்திருக்கிறார்.மமதா பானர்ஜி. ஊழல், பணம் ஆகியவற்றின் பெயரால் பொதுமக்களின் விருப்பத்துக்கு மாறாக சில சக்திகள் சமரசமாகிவிடுகின்றனர் என்று சாடியிருக்கிறார்.
சங்மா
இந்நிலையில் மமதாவை தொடர்பு கொண்டு ஆதரவு கோரிய பி.ஏ.சங்மாவிடம், கலாமை நாங்கள் நிறுத்தப் போகிறோம்..நீங்கள் போட்டியில் இருந்து விலகிக் கொள்ளுங்கள் என்று மமதா கூறியதாக தெரிகிறது

கருத்துகள் இல்லை: