கலாமை பாஜக கூட்டணி ஆதரித்தால் காங். ஓட்டு முழுவதும் பிரணாப்புக்குத்தான் கிடைக்குமா?
அப்துல் கலாமை தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே தெரிகிறது. அப்படி ஆதரிக்கும் நிலையில் பிரணாப் முகர்ஜிக்கு புதுசிக்கல் ஒன்று இருக்கிறது. இந்தத் தேர்தல் கட்சி கொறாடா அடிப்படையானது அல்ல. ரகசிய வாக்கெடுப்பும் கூட. அதனால் காங்கிரசுக்கு முழு வாக்குகளும் சென்றடையுமா? என்ற பீதியையும் கிளப்பிவிட்டிருக்கின்றனர்.
இதற்கு முன் உதாரணமும் இருக்கிறது. குடியரசுத் தலைவராக இருந்த ஜாஹிர் உசேன் காலமான நிலையில் துணைக் குடியரசுத் தலைவராக இருந்த விவி கிரியை காங்கிரஸ் கட்சி குடியரசுத் தலைவராக்கவில்லை. இதற்கு மாறாக நீலம் சஞ்சீவ ரெட்டியை அதிகாரப்பூர்வ வேட்பாளராக களம் இறக்கியது. நீலம் சஞ்சீவ ரெட்டியை விரும்பாத இந்திரா காந்தி போட்டி வேட்பாளரை வி.வி.கிரியை களமிறக்கினார். வி.வி.கிரியும் வெற்றி பெற்றார். கட்சித் தலைமையின் முடிவை மீறி காங்கிரஸ் கட்சியினரே வி.வி. கிரிக்கு வாக்களித்த அதே நிலைமை இப்போது பிரணாப்புக்கு ஏற்படலாம் என்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக