செவ்வாய், 19 ஜூன், 2012

வீரபாண்டி ஆறுமுகம் மீது ‘குண்டர்’ சட்டம் குண்டாக இருப்பவர் ஆட்சியிது

குண்டர்’ வீரபாண்டியார்: மேலிட ‘தண்டர்’ கேட்ட சேலம் போலீஸ்!

Viruvirupu
இதுவரை சாதாரண பிரிவுகளில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்ட வீரபாண்டி ஆறுமுகம் மீது ‘குண்டர்’ சட்டம் பாய்ந்திருக்கிறது. ஏற்கனவே சிறையில் உள்ள அவரிடம், “நீங்கள் தற்போது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளீர்கள்” என்ற உத்தரவின் நகல் வழங்கப்பட்டது.
தற்போது, சேலம் சேலம் அங்கம்மாள் காலனி எரிப்பு வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் முன்னாள் தி.மு.க. அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம். இன்றைய தேதியில் இவர்மீது 6 வழக்குகள் உள்ளன. அவற்றில், லேட்டஸ்ட் வழக்கான அங்கம்மாள் காலனி எரிப்பு வழக்கை தவிர மற்றைய 5 வழக்குகளும், நில அபகரிப்பு வழக்குகள்தான்.
அண்ணே.. வெயிட். அடுத்த வழக்கு வருது!
அப்படியிருந்தும் வீரபாண்டியாரை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் உத்தரவு எப்படி போடப்பட்டது என்பதில் காவல்துறைக்கு உள்ளேயே குழப்பம் நிலவுகிறது. சேலம் போலீஸ் கமிஷனர் மாஹாலி இந்த உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.
வீரபாண்டி ஆறுமுகத்தின் நெருங்கிய சர்க்கிளில் இருவர் மீது ஏற்கனவே குண்டர் சட்டம் கடந்த காலத்தில் பாய்ந்திருந்தது. வீரபாண்டியாரின் தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ்குமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருந்தது. அதேபோல் வீரபாண்டி ஆறுமுகத்தின் உதவியாளர் கவுசிக பூபதி மீதும் குண்டர் சட்டம் பாய்ந்திருந்தது.
அந்த இருவர் விவகாரத்திலும், அவர்களுக்கு எதிராக பதிவாகியிருந்த கேஸ்களில், கிரிமினல் ரீதியான குற்றச்சாட்டுகளுக்கு, மெட்டீரியல் எவிடென்ஸ் என்று அழைக்கப்படும் ஆதாரங்கள் இருந்தன. ஆனால், வீரபாண்டியாரின் நில அபகரிப்பு வழக்குகள், மற்றும் அங்கம்மாள் காலனி வழக்கில், சாதாரண போலீஸ் சாட்சிகள் மட்டுமே ஆதாரங்களாக ரிஜிஸ்தார் ஆகியுள்ளன.
அதை மட்டும் வைத்துக்கொண்டு ஒருவர் மீது குண்டர் சட்டத்தை பாய்ச்சுவது, ஓரளவுக்கு ரிஸ்க்கான விஷயம். வீரபாண்டியார் தரப்பு நீதிமன்றத்தை நாடினால், அவர் குண்டர் பிரிவு சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டது செல்லுபடியாகாது என நீதிபதி கூற வாய்ப்பு உள்ளது.
தற்போது வேலூர் சிறையில் உள்ள வீரபாண்டி ஆறுமுகத்திடம் குண்டர் சட்டத்தில் அவரை கைது செய்ததற்கான உத்தரவை, பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் இமானுவல் ஞானசேகரன் ஆகியோர் நேரில் சென்று கொடுத்துள்ளனர்.
குண்டர் சட்டம், தற்போதுள்ள 6 வழக்குகளுக்காக என்றால், புஸ் என்று காற்று போய்விடும். அதனால், வீரபாண்டியார் மீது ஏற்கனவே பதிவாகியுள்ள வழக்குகளை தவிர, புதிய வழக்கு ஏதாவது பதிவாக சான்ஸ் உள்ளது.
 ண்டாக இருப்பவர் ஆட்சியிது 

கருத்துகள் இல்லை: