கொழும்பில் சரவணமுத்து விளையாட்டரங்கு இருக்க முடியுமென்றால் வடக்கில் ஏன் மஹிந்த ராஜபக்ஸ பெயரில் மைதானம் இருக்கக் கூடாது? பாணந்துறையில் பிரபாகரனின் தந்தை அமைத்த கோயிலைச் சிங்களவர்கள் இடிக்கவில்லை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தர்ப்பவாத அரசியலை மேற்கொள்கின்றது என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் சரவணமுத்து விளையாட்டரங்கு இருக்க முடியுமென்றால், வடக்கில் ஏன் மஹிந்த ராஜபக்ஸ பெயரில் மைதானம் இருக்கக் கூடாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கிழக்கிலும் ஜனாதிபதியின் பெயரில் விளையாட்டு அரங்கு ஒன்றை அமைக்குமாறு தாம், அமைச்சர் பசில் ராஜபக்ஸவிடம் கோருவதாகக் குறிப்பிட்டுள்ளார். பாணந்துறையில் பிரபாகரனின் தந்தை அமைத்த கோயில் ஒன்று காணப்படுவதாகவும், அதனைச் சிங்கள மக்கள் இடிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான ஓர் நிலையில் வடக்கில் பௌத்த விகாரை ஒன்று இருப்பதில் என்ன தவறு எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் இந்து- பௌத்த சமாதானத்தை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
அரந்தாலாவ, தலதா மாளிகை மற்றும் பஸ் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் தேவையென்றால் அரசாங்கத்தினால் காணொளி தொகுப்பு ஒன்றை தயாரிக்க முடியும் என்ற போதிலும், சமாதானத்தை நிலைநாட்டுவதே அரசாங்கத்தின் நோக்கமாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக