உத்திரப்பிரதேச மாநிலத்தில் ரயில் தடம் புரண்ட விபத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். 200 பேர் காயம் அடைந்துள்ளனர்.
மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் இருந்து டெல்லி நோக்கி சென்றுகொண்டிருந்த கல்கா மெயில் ரெயில் உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் மால்வா ரெயில் நிலையம் அருகே தரம் புரண்டது. என்ஜின் உள்ளிட்ட 15 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகின.
இந்த விபத்தில் 35 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் படுகாயம் அடைந்தவர்களுக்கு மத்திய அரசு இழப்பீட்டுத் தொகை அறிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே உயர் அதிகாரி சந்திரலேகா முகர்ஜி, ரயில்வே இணை அமைச்சர் முகுல் ராய் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு 5 லட்ச ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் இழப்பீட்டுடத் தொகையாக அறிவித்துள்ளார். மீட்புப் பணிகள் விரைவாக நடந்து வருகிறது என்றார்.
இந்த விபத்துக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ள உத்திரப்பிரதேச மாநில முதல்வர் மாயாவதி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்ச ரூபாயும், படுகாயம் அடைந்தோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக