ஞாயிறு, 18 ஜூலை, 2010

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், எங்களுக்கு 110 தொகுதிகள் வேண்டும்' என்றே இனி தாராளமாக கேட்கலாம்!"

கார்த்தி லீடு... இளங்கோவன் போடு!

கடந்த 11-ம் தேதி திருப்பூரில் மத்திய அரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் நடந்தது. இதற்குத் தலைமை தங்கபாலு. சிறப்புரை ப.சிதம்பரம். முன்னதாகப் பேசிய கார்த்தி சிதம்பரம், "நான் சொல்லப்போகும் கருத்துகள் கடைக்கோடியில் இருக்கும் காங்கிரஸ் தொண்டனின் எதிரொலி. இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் 13 லட்சம் இளைஞர்களை காங்கிரஸ் கட்சிக்குள் கொண்டுவந்து இருக்கிறோம். வரும் தேர்தலில் நாம் அதற்கான பிரதிநிதித்துவத்தைக் கூட்டணிக் கட்சியிடம் கேட்டுப் பெற வேண்டும். ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு இரண்டு ஸீட் வீதம் நமக்கு 78 ஸீட்களை தலைவர்தான் கண்டிப்பாகக் கேட்டுப் பெறவேண்டும். அதேபோல், ஏழெட்டு எம்.பி-க்களே வைத்திருப்பவர்கள் மத்திய அரசில் இரண்டு மூன்று மந்திரிகளைக் கேட்டு வாங்குகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் 36 எம்.எல்.ஏ.-க்களை வைத்திருக்கும் நமக்கு மந்திரிசபையில் இடம் இல்லை. இனி கூட்டணி பேசும்போது உரிய தொகுதிப் பங்கீடு, அமைச்சரவையில் காங்கிரசுக்கும் இடம் என்ற கண்டிஷனோடுதான் பேசணும். இல்லையென்றால் 13 லட்சம் இளஞர்களும் காங்கிரஸ் தலைமையை மன்னிக்க மாட்டார்கள்!" என்று கொளுத்திப்போட்டார்.

அதற்கு எண்ணெய் ஊற்றுவதுபோல் பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், "இங்கே என்ன பேசுவது என்று தெரியாமல் வந்தேன். தம்பி கார்த்தி, எனக்கு லீடு எடுத்துக் கொடுத்துவிட்டார். இப்போது நாம் கூட்டணி வைத்திருக்கும் கட்சியுடன்தான் 1980-லும் கூட்டணி வெச்சிருந்தோம். அப்போது நமக்கு ஒதுக்கப்பட்ட ஸீட்கள் 110. எனவே, தம்பி கார்த்தி அவர்கள் 'எங்களுக்கு 110 தொகுதிகள் வேண்டும்' என்றே இனி தாராளமாக கேட்கலாம்!" என்றார்.
சு. சாமியால் ஊழல் அமைச்சர் வெளியேரினால் நல்லது.
Report abuse | 8 hours ago
Kathir Palani
சாமி இதுவரை எந்த வழக்கில் வெற்றிபெற்றுள்ளார். அவருக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தவுடன் காட்சிகள் மாறும். வேறு விசயத்தை பூதாகாரப்படுத்தி இதை மறக்கடித்துவிடுவார். நாமும்.
Report abuse | 8 hours ago
Mohamed Razvi
இளங்கோவன் அவர்களே, காங்கிரஸ் ஒதுக்கிக்கொண்ட (ஒதுக்கப்பட்ட அல்ல) சீட் 114. அதில் ஜெயித்தது 31. வரலாறு தெரியாமல் பேசக்கூடாது அமைச்சரே. மேலும் விவரங்களுக்கு...
Report abuse | 8 hours ago
naveen
 சு.ஸ்வாமிக்கு நல்ல ரேட் படிந்தவுடன் வழக்கை கந்தலாக்கும் வேலையை அவரே பார்த்துக்கொள்ளப்போகிறார். இதுக்கு போய் யாராவது பதவி விலகுவார்களா? விகடன் நல்லாத்தான் கணவு காண்கிறது. அது சரி கணவு காணும் உரிமை எல்லார்க்கும் உண்டே!
Report abuse | 9 hours ago
Rajendran
  இளங்கோவன், 1980ல 110 கொடுத்தும் தோத்துல்ல போனீக, அத மறந்துராதீகப்பு. ஏதோ 35ன்னாலும் ஜெயிக்கிற வழிய பாருங்க!
Report abuse | 10 hours ago
Rajendran
  ஜேசுதாஸ் பாடிய பாடலொன்று நினைவுக்கு வருவதைத் தடுக்க இயலவில்லை.. "கனவு கானும் வாழ்கை யாவும் கலைந்து போகும் காலங்கள்..."
Report abuse | 10 hours ago
Rajendran
  //பொய் எத்தனை நாள் ''கை'' கொடுக்கும் மறந்துவிடாதே!// புரியலையே!! கை கொடுக்கிறது பொய்யா இல்ல பொய் கொடுக்கிறது கையா?
Report abuse | 10 hours ago
Rajendran
 //"நான் சொல்லப்போகும் கருத்துகள் கடைக்கோடியில் இருக்கும் காங்கிரஸ் தொண்டனின் எதிரொலி..// அப்புறம் ஏம்பு கோஷ்டி கோஷ்டியா சுத்துக்கிட்டு எங்களுக்கும் சுத்துருங்க!
Report abuse | 10 hours ago
Zahir Husain
  தேர்தல் என்று வந்தால் காசு சம்பாதிப்பதற்க்காகவும் வேறு சில குறுக்குக்குக் காரணங்களுக்காக சூனாச்சாமி கோர்ட் செல்வது, அப்பூரம் அந்த செங்கோல் போட்டோ எல்லாம் வந்துவிடும். விகடனும் வால்பிடிக்கும்.....

கருத்துகள் இல்லை: