சனி, 10 மே, 2025

பஹல்ஹாம்‌ கொ‌லைகள் + பீகார் தேர்தல் ! Flash back இந்திராவின் strategyகள், பாகிஸ்தானை முதலில் தாக்க தூண்டியது

 Dev JB  :  பஹல்ஹாம்‌ கொ‌லைகள் நடந்த தினத்திலிருந்தே நாம்  இருவரை மட்டுமே‌ குற்றம்‌ சாட்டுகிறோம். காரணமும் பீகார் தேர்தல்தான்னு தெளிவா சொல்றோம்.
போர்.. போர்.. னு இந்தியாவின் பதிலடியை  பொய், புனைவுகளுடன் நேரடியாக நாட்டின் மெயின் ஸ்ட்ரீம் ஊடகங்களே பரப்பியதை எக்ஸ்போஸ் செய்தோம்.
கிட்டத்தட்ட 300 கிமீகள் சாவகாசமாக நடந்து வந்து மதத்தை கேட்டு, கதையெல்லாம் பேசிவிட்டு சுட்டுட்டு அதே சாவகாசமாக போயிருக்கானுகனு ச.ங்கிக சொல்றத எடுத்துக்குவோம். பாகிஸ்தானின் உள்ளே 9 இடங்களில் தீவிரவாதிகள் கேம்ப் இருந்ததை உளவுத்துறை கண்டுபிடித்து.... னு சொல்லும் போதே உள்நாட்டுக்குள் சாவகாசமாக சுத்தற தீவிரவாதிகளைப்பற்றியெல்லாம் னு கேள்வி கேட்காத அறிவுள்ளவர்களே கிடையாது...


இவ்வளவு கேள்விகளை நாம் முன்வைக்க காரணம்... வரலாறு என்னன்னு தெரிந்ததால் தான். அதென்ன வரலாறு..
எல்லோருக்கும் நினைவுறுத்துவோம். இந்தியாவின் OG இரும்புமனிதர் திருமதி இந்திரா காந்தி அமெரிக்க அதிபர் நிக்ஸனிடம், Nov 1971ல், பாகிஸ்தானின் அட்டூழியங்கள் ஈஸ்ட் பாகிஸ்தானில் அதிகமாகிகொண்டே இருப்பதால் அகதிகள் இந்தியாவுக்குள் அதிகமாக ஆகிவிட்டார்கள். (ஆனால் உண்மையான காரணம் பாகிஸ்தானை உடைப்பது தான் என்று அமெரிக்காவுக்கு தெரியாதா என்ன?). என்று இந்தியாவின் பிரச்சினையை சொல்கிறார்.
நிக்ஸன் சரியான பதில் குடுக்காததால்,  பத்திரிக்கையாளர்களை கூட்டி, அமெரிக்க மக்களிடம் நேரடியாக உரையாற்றிவிட்டு வந்துவிட்டார். வந்தவர் ரஷ்ய அதிபர் ப்ரஷ்னேவிடம் தெரிவித்து விட்டார்.
இந்திராவின் செய்கைகளை பார்த்து பதட்டமான பாகிஸ்தான் முட்டாள்தனமாக Dec 3 அன்று இந்திய நிலைகளை விமானப்படை மூலம் தாக்குகிறது. இந்திரா நாட்டுமக்களுக்கு "war is forced on us" என்று ஃபீல்ட் மார்ஷல் மானெக்ஷாவுக்கு ஆணை பிறப்பித்தவுடன் 4ந்தேதி டாக்காவுக்குள் இந்திய படைகள் நுழைந்துவிட்டன.
அமெரிக்கா அவர்களின் பிரபலமான 7th fleetஐ வங்காளவிரிகுடாவினுள் செலுத்தி இந்தியாவை பணியவைக்க வருகிறது. சைனாவும் மோடி மாதிரி வாயிலேயே வடை சுட ஆரம்பித்தது.
இந்திரா நிக்ஸனிடம் நேரக்கெடு வைத்து அதற்குள் அமெரிக்கா தனது படைகளை வாபஸ் வாங்காவிட்டால் சுக்கு நூறாக உடைத்தெறிவேன் என்று சொன்னார். அமெரிக்கா மூடிட்டு கிளம்பியது. சைனாவும் சைடு வாங்கியது. ரஷ்யா துணை இருந்தது.
14ந்தேதி பாகிஸ்தான் சரண் அடைந்தது. இரண்டாவது உலகப்போருக்கு பிறகு
 இரு நாடுகளுக்கு இடையே நடந்த போரில் வெற்றி பெற்ற நாடு இந்தியா. பங்களாதேஷ் பிறந்தது.
போருக்கு முன்பான இந்திராவின் strategyகள், பாகிஸ்தானை முதலில் தாக்க தூண்டியது, ரஷ்யா support கேட்டு சைனாவை off செய்தது, அமெரிக்க அதிபரை  நேரடியாக மிரட்டியது... கடைசியாக வெறும் 10 நாளில் பாகிஸ்தானை உடைத்து பங்களாதேஷை உருவாக்கியது
- இதில் போரைவிட அதை முன்னெடுக்கும் தலைவரின் வீரம், விவேகம், சமயோஜித அறிவு மற்றும் ஒட்டுமொத்த இந்தியாவின் பெயரை, பாதுகாப்பை காப்பாற்றிக்கொள்ளும் பொறுப்பு மற்றும் அக்கவுன்டபிலிட்டி என பாடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கு.
அதைவிட்டுவிட்டு ஏவல் மீடியா ய்நாகளை வைத்துக்கொண்டு உதார்விடுவது நாட்டின் மானம் காக்கும் வீரர்களுக்கு கௌரவத்தை கொடுக்காது. நீ மானங்கெட்ட. கோழையாக, டிப்ளமசின்னா என்னன்னே தெரியாத அடிமுட்டாளாக‌ இருந்துட்டுப்போ. நாட்டை காட்டிக்கொடுக்கும் வேலைகளில் இறங்காதே.

கருத்துகள் இல்லை: