சனி, 10 மே, 2025

5 வயது குழந்தை கொடூரமாக பாலியல் பலாத்காரம் மருத்துவமனையில் 10 மணி நேரம் கவனிக்க படவில்லை உத்தர பிரதேசம்

Representational image.
May be an image of hospital and text that says 'TOI 5-year-old rape survivor made to wait 10 hours for medical test in UP; government calls for action Representative image'

Vasu Sumathi :  மனசாட்சியை சிதறடிக்கும் இந்த செய்தியில் இரண்டு பகுதிகள்...
 ஒரு 5 வயது பச்சை குழந்தை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள்..  
அந்த சிறுமி அரசு மருத்துவமனையில் 10 மணி நேரம் கவனிப்பாரற்று கிடந்த அவலம்!
வன்கொடுமைக்கு ஆளான அந்த குழந்தை பிலிபித் மாவட்ட பெண்கள் அரசு மருத்துவமனையில் அன்றிரவு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
ஆனால் அந்த குழந்தைக்கு உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய எந்த மருத்துவ பரிசோதனையும் செய்யாமல்,  10 மணி நேரத்திற்கும் மேலாக கேட்பாரற்று கிடந்திருக்கிறார். இது குழந்தையின் உடல்நலத்தை மிகவும் பாதித்துள்ளது. மேலும் இது தொடர்பான வழக்கின் தடயவியல் ஆதாரங்களும் அழிந்துள்ளனவாம்.


அரசு மருத்துவர் அல்லாத தன்னாட்சி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த (night duty) மருத்துவருக்கு இந்த குழந்தையை பரிசோதிக்க முடியுமா என்ற வாக்குவாதமே குழந்தையைப் சிகிச்சை அளிக்காதற்கு முக்கிய காரணமாம்..
இதுதான் பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் இன்றைய நிலை.  யோகி ஆதித்யநாத் ஆட்சியில் 2020ல் ஏறத்தாழ 6900 குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அதாவது சராசரியாக ஒரு நாளைக்கு 19 குழந்தைகள்...
மோடியின் இந்தியாவில் 2016 முதல் 2022 வரையிலான காலத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை 96 சதவீதம் அதிகரித்துள்ளது. இதெல்லாம் அரசாங்கத்தின் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரங்கள்...
ஒரு சிறிய அசம்பாவிதம் நடந்து விட்டால்கூட பாஜக ஆளாத பிற மாநிலங்களில் அந்த முதல்வர் உடனே ராஜினாமா செய்ய வேண்டும்.
இவையெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். நெஞ்சை உளுக்கும் இந்த செய்தி எல்லா தேசிய தொலைக்காட்சி ஊடகங்களிலும் விவாதமாகவும், பத்திரிகைகளில் முதல் பக்க செய்தியாகவும் வந்திருக்க வேண்டும் அல்லவா?  
டைம்ஸ் of இந்தியா தவிர வேறு எங்கும் வரவில்லை
பாஜகவிற்கு வாக்களித்ததை தவிர வேறு என்ன பாவம் செய்திருக்கிறார்கள் அம்மாநில மக்கள்?

கருத்துகள் இல்லை: