வியாழன், 31 மார்ச், 2022

பார்ட்டிக்கு வந்த பெண்ணை நான்கு பேரோடு சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த நீச்சல் வீரர்.. பெங்களூரில் நடந்த பகீர் சம்பவம்!

டின்னருக்கு நம்பி வந்த பெண்ணை நண்பர்களுக்கு இரையாக்கிய நீச்சல் வீரர்.. பெங்களூரில் நடந்த பகீர் சம்பவம்!

கலைஞர் செயதிகள்  : பாதிக்கப்பட்ட பெண் மேற்குறிப்பிட்ட 4 வீரர்களில் ஒருவரான ரஜத் என்பவருடன் டேட்டிங் செயலி மூலம் பழகி வந்திருக்கிறார்.
டின்னருக்கு அழைத்து இளம் செவிலியரை நீச்சல் வீரர்கள் நால்வர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெங்களூருவில் நடந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண் மேற்குறிப்பிட்ட 4 வீரர்களில் ஒருவரான ரஜத் என்பவருடன் டேட்டிங் செயலி மூலம் பழகி வந்திருக்கிறார்.
இதையடுத்து கடந்த மார்ச் 24ம் தேதி நியூ பெல் ரோட்டில் உள்ள தனியார் உணவு விடுதியில் இரவு பார்ட்டிக்காக ரஜத் நர்ஸை வர வைத்திருக்கிறார். அப்போது பெண்ணை ஒரு அறைக்கு அழைத்து சென்றிருக்கிறார் ரஜத்.


அதன் பிறகு ரஜத் நண்பர்கள் மூவரும் அந்த அறைக்குள் சென்றிருக்கிறார்கள். அப்போது செவிலியர் பெண்ணை ரஜத்தும் அவரது நண்பர்கள் நால்வரும் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறார்கள்.
பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த அந்த நால்வரும் அவ்விடத்தை விட்டு தப்பியோடியிருக்கிறார்கள். அதன் பிறகு அங்கிருந்து வெளியேறிய பாதிக்கப்பட்ட பெண் பெங்களூரு சஞ்சய்நகர் காவல் நிலையத்தில் நடந்த கொடூரம் குறித்து புகார் தெரிவித்திருக்கிறார்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ரஜத், தேவ் சரோஹா, யோகேஷ் குமார், ஷிவ் ரானா ஆகிய நால்வரும் டெல்லியை சேர்ந்தவர்கள் என்றும், நீச்சல் பயிற்சிக்காக பெங்களூருவுக்கு வந்திருந்த போது இந்த சம்பவத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள் என தெரிய வந்திருக்கிறது.

மேலும் புகார்தாரரான செவிலியல் பெண் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 22 வயதுடையவர் என்பதும், அப்பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது உறுதியானது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே போலிஸாருக்கு தகவல் தெரிந்ததால் பெங்களூருவை விட்டு தப்பியோட முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் சஞ்சய்நகர் போலிஸார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதில் பாலியல் கொடுமை செய்த நால்வரை கர்நாடகாவின் வெவ்வேறு இடங்களில் வைத்து மடக்கி பிடித்து கைது செய்திருக்கிறது தனிப்படை.

கருத்துகள் இல்லை: