திங்கள், 28 மார்ச், 2022

இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம்? ரணில் பிரதமராகிறார்?

tamilmirror.lk  : பிரதமர் பதவியில் மாற்றங்கள் ஏற்படக்கூடுமென, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாடு தற்போது முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், தற்போதைய அரசாங்கத்தினால் அரசியல் ரீதியில் பாரிய மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.
அதனடிப்படையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியை துறப்பார் என்றும் அதன்பின்னர், அரசியல் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.click link - dailymirror.lk


அதேபோல, தேசிய அரசாங்கமொன்றை நிறுவி, பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்குவதற்கும் கலந்துரையாடப்படுவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு தற்போது முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அரசியல் ரீதியில் மாற்றங்களை சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மேற்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கைக்கு அமையவே, அரசியல் மாற்றம் செய்யப்படவிருப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்படுகின்றது

கருத்துகள் இல்லை: