சனி, 2 ஏப்ரல், 2022

மருத்துவத்துறையில் சீனியர்கள் - அஷிஸ்டன்ட்கள் என்ற முகமூடியில் உலவும் மனிதத்தன்மையற்ற மிருகங்களால் பறிபோன மருத்துவரின் உயிர்

 john Aaron Prabhu  :  Why I hate this profession.! It's not a noble one.! Anti Ragging Warning SoCalled Seniors
மருத்துவர்  அர்ச்சனா-விற்காக  கொதித்துக் கொண்டிருக்கும் மருத்துவர்களை நோக்கி சில கேள்விகள் …
இன்று வட இந்தியாவில் நடந்தது போல தமிழ்நாட்டில் அனுதினமும் இது போன்ற கொடுமைகள் இங்கும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன …
நீங்கள் நாள்தோறும் உடன் பணிபுரியும் பெண் மருத்துவர்களை அல்லது ஜூனியர் மருத்துவர்களை சீனியர்கள் என்ற ஒரே காரணத்தால் கொடுமைப்படுத்தாமலா இருக்கிறீர்கள்…?
25/26 வயதில்  இரண்டாமாண்டு முதுநிலை மருத்துவம் படித்துக் கொண்டு 30 வயது அல்லது 25-க்கு குறைவான வயதுடைய முதலாமாண்டு மருத்துவர்களை நீங்கள் நடத்தும் விதம் என்ன..?
தமிழகம் முழுவதும் பெரும்பாலான மருத்துவக்கல்லூரிகளில் இருந்து தொடர்ந்து இது போன்ற குற்றச்சாட்டுகள் வந்துகொண்டுதான் இருக்கிறது்...


ஏன் கடந்த வாரம்
சென்னையில் சீனியர்கள் கொடுமையால் ஒரு முதுநிலை மாணவி இதனால் தற்கொலைக்கு முயலவில்லையா..?
காரணம் : சீனியர்ஸ் என்ற இறுமாப்புடன் அலையும் மனிதத்தன்மையற்ற உயிர்க்கொல்லி மருத்துவர்கள்...
இது குறித்து நாங்கள் அமைதியாக இல்லை… தொடர்புடைய நபர்களை குறித்து வைத்துக் கொண்டு...
சட்டப்படியும் உயர் அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் கவனத்திற்கும் எடுத்துச்செல்லக் காத்திருக்கறோம் ..
இது குறித்து சில இடங்களில் எதிர்த்து கேட்டால்.... எங்களை எங்கள் சீனியர் இப்படித்தான் நடத்தினார்கள்...
ஆகவே நாங்களும் அப்படித்தான் நடத்துவோம் என்று ஆணவத்துடனான நொண்டிச்சாக்கு பதில் வருகிறது.
அனுதினமும் நோயாளிகள் முன்பு மரியாதைக் குறைவாக திட்டுவது , மருத்துவ குறிப்புகளை கிழித்து எரிந்து தண்டனை தருவது,
நோயாளிகளுக்கு முன்பாகவே அறைக்கு வெளியே நிற்க வைப்பது என பல செயல்கள் மூலம் நீங்கள் அவர்களை தற்கொலைக்கு தூண்டவில்லையா..?
இன்னும் அதிக பட்சம்
"நீ முதலாமாண்டு, அதனால் தூங்காமல்தான் இருக்க வேண்டும்" என வலுக்கட்டாயமாக அடிமைகளாக நடத்தும் சாடிஸ/ குரூரமான புத்தி உங்களிடம் இல்லையா..?
இன்னும் சில இடங்களில் மருத்துவப் பேராசியர்கள் உங்களை பாஸ் பண்ணிவிடனும்னா இரவு சரக்கு வாங்கி தாடா என அடிமைகளாக இன்னும் வைத்திருக்கின்றனர் …
சில இடங்களில் முதலாமாண்டு இப்படி நீங்கள் இருந்து அடுத்த வருசம் நீங்கள் இப்படி ஜூனியர்ஸை நடத்துங்கள் என  கேவலமான அறிவுரை வேறு …
இன்னும் சில கல்லூரிகளில் பகல் இரவு என வருடம் முழுவதும் தூங்க விடுவதே இல்லை…
மேலும் ஏதாவது சிறு தவறு செய்தால் கூட ஜூனியர் மருத்துவர்களை OP-க்கு வெளியே விடுவது , அறுவை சிகிச்சை அறையை விட்டே வெளியேற்றுவது என மருத்துவக் கல்லூரி பேராசியர்களே...
முதலாமாண்டு முதுநிலை மருத்துவர்களை கொடுமைப்படுத்துவது என தொடர்கிறது...
சில கல்லூரிகளில் உதவிப்பேராசிரியர்கள்
"எங்களுக்கு அடிமைகளாக அடங்கி போகாவிட்டால் அறுவை சிகிச்சையில் வாய்ப்பளிக்க மாட்டோம் பாஸ் போட மாட்டோம்" என மிரட்டி அனுதினமும் தொந்தரவு செய்கின்றனர்..
எச்சரிக்கை : இதுபோன்ற மனிதத்தன்மையற்ற செயல்கள் குறித்து ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகிறது … பாதிக்கப்பட்டவர்களிடம் வாக்குமூலம்,  கடிதங்கள் பெறப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் இது குறித்து பேசப்படும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை…
துறைரீதியான முறையீடு மற்றும் காவல்துறை/ நீதிமன்றம் வாயிலாக இவற்றுக்கெல்லாம் முடிவுரை எழுதப்படும்...
உடனிருக்கும் மருத்துவர்களை சக மனிதர்களாக நடத்துங்கள்.!
அவர்கள் உங்கள் அடிமைகள் அல்ல..!!
தமிழக அரசு MBBS மருத்துவ மாணவர்களுக்கு எப்படி "Anti-Ragging Committe" அமைத்துள்ளதோ,
அதே போல் முதுநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கும் அவர்கள் இன்னல்களை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் என்பது முதலாமாண்டு மாணவர்களின் கோரிக்கையாகும்.
மேலும் உச்ச நீதிமன்ற / உயர் நீதிமன்ற ஆணையின்படி வேலை நேரம் ஒழுங்கு செய்யப்படவும் , வாரம் ஒரு முறை விடுமுறை அளிக்கப்படவும் வேண்டும் என்பது தமிழ்நாடு அரசிடம் முதுநிலை மருத்துவர்கள் முன்வைக்கும் கோரிக்கையாகும்…
இது குறித்து கடந்த காலங்களில் பேசப்படாததால் இழந்த / பிரிந்த குடும்பங்கள் ஏராளம்…
இன்றும் நாம் இழந்து கொண்டிருப்பது ஏராளம் ..
எனவே தமிழக அரசு தலையிட்டு மேற்கண்ட இன்னல்களை சரி செய்யும் நாள் விரைவில் வரும்...
மருத்துவத்துறையில் சீனியர்கள் மற்றும் அஷிஸ்டன்ட்கள் என்ற முகமூடியில் உலவும் இதுபோன்ற மனிதத்தன்மையற்ற மிருகங்களால்
இன்னொரு மருத்துவரின் உயிர் பறிக்கப்படும் வரை காத்திருக்க முடியாது.!
இறுதி எச்சரிக்கை :
திருந்துங்கள்.!
அல்லது,
தொடர்ந்து இதுபோன்ற இழி செயல்களில் ஈடுபட்டு வரும் சீனியர்கள் சிலர் கம்பி எண்ணவும்..
AP-களில் சிலர் பதவி பறிக்கப்பட்டு மருத்துவ கவுன்சில் பதிவை நிரந்தரமாக தியாகம் செய்யவும் தயாராகுங்கள்..!!
நன்றி.!

 LR Jagadheesan :  If everyone speaks openly about their respective professions that would be a good start for honest public debate on how to at least minimise the malice (if not abolish it completely) and move forward.
Journalism is one profession that never does any kind of internal criticism of their profession and its decay in India/Tamil Nadu (it's beyond redemption) in any form or forum. Never. And journalists are one tribe of humans who criticise everyone under the sun. Except bitching about each other, not a word about how rotten & corrupt to the core their profession is now in India/Tamil Nadu and every one of us actively/passively accepts that for our monetary benefits.

கருத்துகள் இல்லை: