புதன், 30 மார்ச், 2022

வன்னியர் உள் ஒதுக்கீடு ரத்து..மேல்முறையீடு செய்த தமிழக அரசு, பாமக.. உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு..!

  Rajkumar R -  Oneindia Tamil :  சென்னை : வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் அரசாணையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மற்றும் பாமக தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்குல் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது.
கடந்த முறை ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு வன்னியர் சமூகத்துக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்தது.
தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு நடைமுறையில் உள்ள 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் , சீர் மரபினருக்கு 7 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5 சதவீதம் என மூன்று பிரிவுகளாக உள் ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் அறிவித்தது.



வன்னியருக்கு உள் ஒதுக்கீடு மேலும் இது தொடர்பாக சாதிவாரியாக கணக்கெடுப்பினை நடத்த நீதிபதி குலசேகரன் தலைமையில் கமிட்டியும் அமைக்கப்படும் என அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதிமுகவின் இந்த அறிவிப்பை தமிழகத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் வரவேற்றன. ஆனால் இது தேர்தல் நோக்கில் அரசியல் காரணமாக அவசர கதியில் வழங்கப்பட்ட உள் ஒதுக்கீடு என்று அப்போது திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்தன

மேலும் இது தொடர்பாக சாதிவாரியாக கணக்கெடுப்பினை நடத்த நீதிபதி குலசேகரன் தலைமையில் கமிட்டியும் அமைக்கப்படும் என அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதிமுகவின் இந்த அறிவிப்பை தமிழகத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் வரவேற்றன.
ஆனால் இது தேர்தல் நோக்கில் அரசியல் காரணமாக அவசர கதியில் வழங்கப்பட்ட உள் ஒதுக்கீடு என்று அப்போது திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்தன.

இது தொடர்பான அரசாணையை ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் திமுக தலைமையிலான தமிழக அரசு வெளியிட்டது. இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, "சாதி வாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்‌ எனக் கூறி வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள்‌ ஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.

தமிழக அரசு மேல்முறையீடு அதன்படி, வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு அரசாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. ஒட்டு மொத்த நிர்வாகமும் பெரும் இன்னல்களை இந்த தடை உத்தரவின் மூலமாக சந்தித்து இருப்பதாக தமிழக அரசு தனது மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டுள்ளது. இதேபோல் பாட்டாளி மக்கள் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த டிசம்பர் மாதம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தமிழக அரசு சார்பிலும் இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள இடஒதுக்கீடு நடைமுறை குறித்தும், அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள வழிமுறைகள் குறித்தும், உயர்நீதிமன்ற மதுரை கிளை அளித்த தீர்ப்பில் இருந்த குறைபாடுகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்குல் நாளை காலை 10 மணியளவில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது.
சட்டம் மற்றும் நெறிமுறைகளுக்குட்பட்டே உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு இருப்பதால் சாதகமான தீர்ப்பு வரும் என எதிர்பார்ப்பதாக பாமகவினர் கூறி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: