Kamali Teps : உண்மை..! நேட்டோ மற்றும் அமெரிக்கா ஒட்டுமொத்த மனித குலத்தின் நலன்களை கணக்கில் எடுப்பதில்லை.
அவர்கள் சார்ந்த பொருளாதார நலன்களின் அடிப்படையிலேயே செயற்படுகின்றனர்.
நல்லது!
அதற்கு மாற்றான ஒரு தனியான நாடு அல்லது ஒரு முற்போக்கான முகாம் உலகில் இருக்கிறதா என்றால் கிடையாது.
அப்படியானால்.
ஒரேமாதிரியான இரண்டு முகாம்களுக்கு இடையிலான மோதலில் ஒரு தரப்பை ஆதரிப்பது அதுவும் ஆக்கிரமிப்பு யுத்தத்தை ஆரம்பித்த நாட்டை ஆதரிப்பது எந்த வகையான முற்போக்கு?
உலகத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய சில நாடுகளை தவிர மற்றைய நாடுகளில் தமது தலைவரை மக்களே ஐனநாயக நடைமுறைகள் ஊடாக மாற்றும் சாத்தியம் இருக்கிறது. ஐனநாயக ரீதியான மாற்றங்களை சாதிக்க கூடிய இடைவெளி இருக்கிறது.
சொந்த நாட்டி மக்கள் மீது சர்வாதிகார அடக்குமுறை ஆட்சியை செலுத்தும் நாடுகளில் சர்வதேச கொள்கைகள் தங்களை போன்ற சர்வாதிகாரிகள அல்லது தங்கள் கைப்பாவைகளை ஆதரிப்பதாகவே இருக்கிறது.
எனவேதான்.
யுத்தம் ஒன்றை அல்லது ஆயுத முனையில் மாற்றம் ஒன்றுக்கு முயற்சி செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதன் விளைவுகள் ஐனநாயக நடைமுறைகளை பின்னுக்கு தள்ளுவதாகவே இருக்கும்.
புட்டின் போன்ற சொந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருக்கு விஷம் வைத்திருக்கும் ஒருவர் எழுபது வீத மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த ஒரு அரசாங்கத்தை ஆக்கிரமிப்பு மூலம் தூக்கி எறிந்து விட்டு ஒரு சர்வாதிகார பொம்மை அரசை நிறுவும் முயற்சியை ஆதரிப்பது என்பது எந்த விதத்திலும் மக்கள் நலன் சார்ந்த மற்றும் முற்போக்கான சிந்தனை முறை கிடையாது.
இந்த ரஷ்ய ஆதரவு அணியில் எல்லாவகை சித்தாந்த போக்கை
உள்ளவர்களையும் காண முடியும்.
(அமெரிக்க ஆதரவு அணியிலும் தான்)
ஆனால் அதிகாரத்துக்கு எதிரான மற்றும் இராணுவ மயமாக்கலுக்கு எதிரான அணியில் எந்த ஒரு நாட்டின் ஆதரவு கருத்தும் இருக்க வாய்ப்பில்லை!
இந்த ரஷ்ய ஆதரவு ஆக்கிரமிப்பு ஆதரவு அணியில் உள்ள முற்போக்கு பேச்சு தரப்பின் உளவியல் என்னவாக இருக்கும்?
எனது நன்பர் ஒருவர் (தீவிர இடதுசாரி.தனது நோக்கங்களுக்காக ஆயுதம் ஏந்தி சண்டை போட்டவர்) வெளிநாட்டில் குடியேறினார். திருமணம் ஆகி குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஒரு இடதுசாரி புரட்சியாளரின் பெயரை சூட்டினார்.
முடிந்தது... அதன் பின்னர் அவர் என்ன ஆனார் என்று இன்று வரையிலும் தெரியவில்லை.( எனது முன்னாள் புரட்சிகர நன்பர்கள் அனேகமாக எல்லாரும் இருந்த இடத்திற்கும் தெரியாத வாழ்க்கையை தெரிவு செய்து விட்டனர்) .... இப்படி...
குழந்தைக்கு பெயர் வைப்பது மாதிரி.
தங்கள் முற்போக்கு அடையாளத்தை நீடித்தது இழுத்து செல்வதற்கு அமெரிக்க எதிர்ப்பு ஒரு இலகுவான
விடயமாக போய் விட்டது!
குறைந்த பட்சம் ஒரு முதலாளித்துவ ஜனநாயத்தை பாதுகாத்து கடந்து செல்ல வேண்டும் நன்பர்களே!
இந்த ஐனநாயக இடைவெளி கூட கிடையாது என்றால் செய்வதற்கான வேலை பின்னோக்கி போய் விடும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக