கலைஞர் செய்திகள் : கர்நாடக மாநிலத்திற்கு வரவேண்டிய ஏராளமான தொழில் முதலீடுகள் தற்போது தமிழ்நாட்டை நோக்கி நகர்வதாக கர்நாடக சட்ட மேலவையில் அரசு கொறடா பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு துறைகளிலும் தமிழ்நாடு பெரும் வளர்ச்சியைப் பெற்று வருகிறது.
2021ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை தமிழ்நாட்டில் வெளிநாட்டு நேரடி முதலீடு 41.5 சதவிகிதம் வளர்ச்சியடைந்து 17,696 கோடியை எட்டியுள்ளது.
ஒன்றிய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் புள்ளி விபரங்களின்படி, இந்தியாவின் வெளிநாட்டு நேரடி முதலீடு அதிகரிப்பில் தமிழ்நாட்டின் பங்கு 4 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு நேரடி முதலீட்டில் 16 சதவீதம் ஆக ரூ.3,19,976 கோடி வீழ்ச்சியடைந்த போதும் தமிழ்நாட்டில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதன் மூலம் தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு முதலீட்டாளர்களை கவர்ந்திழுப்பதில் முன்னோடி மாநிலமாக மாறி வருவது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்திற்கு வரவேண்டிய ஏராளமான தொழில் முதலீடுகள் தற்போது தமிழ்நாட்டை நோக்கி நகர்வதாக கர்நாடக சட்ட மேலவையில் அரசு கொறடா பேசியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் சட்ட மேலவையில் பேசிய அரசு கொறடா பிரகாஷ் கே ரத்தோட், கர்நாடகத்தில் முதலில் முதலீடு செய்ய திட்டமிட்ட பல்வேறு நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சூழல் இல்லை என்பதால் தமிழ்நாட்டிற்கு சென்றுவிட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேலும், கர்நாடக அரசை விட தொழில் துறைக்கு சிறந்த ஊக்கம், சலுகைகள், வரி தள்ளுபடி மற்றும் பிற சலுகைகள் தமிழ்நாடு அரசு வழங்குகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழில் துறையினருக்கான நில ஒதுக்கீட்டிற்கு கர்நாடக அரசு ரூ.1.50 கோடி விலை நிர்ணயம் செய்துள்ள நிலையில் தமிழ்நாடு அரசு ரூ.40 லட்சம் ரூ.50 லட்சம் வரை மட்டுமே விலை நிர்ணயித்துள்ளதை அரசு கொறடா பிரகாஷ் கே ரத்தோட் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக