நக்கீரன் செய்திப்பிரிவு : திருவொற்றியூரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென மயங்கி விழுந்தார்.
சென்னை திருவொற்றியூர் அண்ணாமலை நகரில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்காக, அங்கிருந்த குடியிருப்புகளை அகற்றும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் இரண்டாவது நாளாக ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் அங்கு பரபரப்பு நிலவுவதால் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், பொதுமக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக, இன்று (02/04/2022) காலை 11.00 மணியளவில், அப்பகுதிக்கு வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பொதுமக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்துக் கொண்டிருந்த சீமான், திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து, சீமானுக்கு அக்கட்சியின் தொண்டர்கள் முதலுதவி அளித்தனர். பின்னர், அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்வதாக தகவல்கள் கூறுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக