வியாழன், 31 மார்ச், 2022

சென்னை ஆல்பெர்ட் திரையரங்கம் மீது பெருநகர மாநகராட்சி ஜப்தி நடவடிக்கை!

கலைஞர் செய்திகள் : வரி செலுத்த தவறியதால் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் மீது ஜப்தி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது மாநகராட்சி நிர்வாகம்.
சொத்து மற்றும் கேளிக்கை வரி செலுத்தாத பிரபல திரையரங்கில் சீல் வைத்து ஜப்தி செய்தது சென்னை பெருநகர மாநகராட்சி.
2021 - 22ம் நிதியாண்டிற்கான சொத்து வரி செலுத்துவதற்கு இன்றே கடைசி நாள் என்றும் கட்ட தவறியவர்களுக்கு வட்டி விதிக்கப்படும் என சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்திருந்தது.
வரி கட்டாததால் ஜப்தி.. சென்னையில் பிரபல தியேட்டர் மீது பெருநகர மாநகராட்சி அதிரடி நடவடிக்கை!


இந்த நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கம் பல ஆண்டுகளாக சொத்து வரியையும் கேளிக்கை வரியும் செலுத்தாமல் இருந்ததாகவும் சென்னை பெருநகர மாநகராட்சி தரப்பில் இருந்து பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வரி செலுத்தாத காரணத்தினால், திரையரங்குக்கு சீல் வைத்து ஜப்தி செய்து இருக்கிறது பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம்.

அதன்படி 51 லட்சத்து 22 ஆயிரத்து 252 ரூபாய் சொத்து வரியும், 14 லட்சம் ரூபாய் கேளிக்கை வரியும் செலுத்தாமல் இருந்ததால் சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919ன் படி ஜப்தி நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: