Shyamsundar - Oneindia Tamil : சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவியை விமர்சித்து இன்று முரசொலியில் கட்டுரை எழுதப்பட்ட நிலையில்,
மாநில சட்டமன்றங்கள் நிறைவேற்றும் மசோதா மீது ஆளுநர்கள் முடிவு எடுத்து ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் வகுக்க வேண்டும் என நாடாளுமன்ற மாநிலங்களவையில் தனிநபர் மசோதாவை தி.மு.க எம்.பி. பி.வில்சன் தாக்கல் செய்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால், தமிழகத்தின் நலன் சார்ந்த சில முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதலளிக்காமல் கிடப்பில் வைத்து விடுகிறார் கவர்னர்.
ஒப்புதல் அளிப்பதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் கால நிர்ணயம் செய்யப்படாததால் தனக்குரிய அந்த அதிகாரத்தை பயன்படுத்தி கால தாமதம் செய்து வருகிறார் தமிழக கவர்னர் என்ற புகார் உள்ளது.
சட்டம் ஆளுநர் சட்டம் ஆளுநர் மக்களால் தேர்வு செய்யப்பட்ட நாம் நிறைவேற்றிய சட்டங்கள் ஆளுனரிடமோ அல்லது குடியரசுத் தலைவரிடமோ முடங்கி உள்ளது. . இன்று வரை 19 நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் ஆளுநர், குடியரசுத் தலைவர் ஏற்காத காரணத்தால் முடங்கி உள்ளது.
இது எப்படி ஜனநாயகம். இது நியாயம் ஆகும். அவங்க எதையும் சரியாக செய்வது இல்லை என்று விமர்சனம் செய்து இருந்தார். பிடிஆர் விமர்சனம் பிடிஆர் விமர்சனம் குறிப்பாக, 7 பேர் விடுதலை, நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதாக்களை நிறுத்தி வைத்துள்ளார் கவர்னர்.
இதில், நீட் தேர்வு விலக்க மசோதா திருப்பி அனுப்பப்பட்டு, அதே சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு மீண்டும் கவர்னருக்கு அனுப்பி வைத்தது திமுக அரசு.
ஒரே பொருள் குறித்த சட்ட மசோதா இரண்டாவது முறையாக தனக்கு அனுப்பி வைக்கப்படும் போது அதற்கு கவர்னர் ஒப்புதலிக்க வேண்டும்.
குறிப்பாக, 7 பேர் விடுதலை, நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதாக்களை நிறுத்தி வைத்துள்ளார் கவர்னர். இதில், நீட் தேர்வு விலக்க மசோதா திருப்பி அனுப்பப்பட்டு, அதே சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு மீண்டும் கவர்னருக்கு அனுப்பி வைத்தது திமுக அரசு. ஒரே பொருள் குறித்த சட்ட மசோதா இரண்டாவது முறையாக தனக்கு அனுப்பி வைக்கப்படும் போது அதற்கு கவர்னர் ஒப்புதலிக்க வேண்டும்.
திருப்பி அரசுக்கே அனுப்ப முடியாது. அந்த வகையில், இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க முடியாத நிலையில் அந்த மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால், இந்த விசயத்தில் அதனையும் நிறுத்தி வைத்துள்ளார் கவர்னர். மாநில அரசு அனுப்பி வைக்கும் மசோதா மீது உரிய காலத்தில் முடிவெடுக்க அரசியலமைப்பு சட்டத்தில் கவர்னருக்கு கால நிர்ணயம் குறிப்பிடவில்லை
இந்த அதிகாரத்தை பயன்படுத்தியே விளையாடி வருகிறார் தமிழக கவர்னர். இது, மாநில அரசுக்கும் ராஜ்பவனுக்கும் தேவையற்ற முரண்பாடுகளை அதிகரிக்கச் செய்வதுடன் சர்ச்சைகளையும் உருவாக்கி வருகிறது. இந்த நிலையில், இந்த அதிகாரத்தில் திருத்தம் செய்ய தனி நபர் மசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். மாநில சட்டமன்றங்கள் நிறைவேற்றும் மசோதா மீது ஆளுநர்கள் முடிவு எடுத்து ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் வகுக்க வேண்டும் என நாடாளுமன்ற மாநிலங்களவையில் தனிநபர் மசோதாவை தி.மு.க எம்.பி. பி.வில்சன் தாக்கல் செய்துள்ளார்.
இந்த அதிகாரத்தை பயன்படுத்தியே விளையாடி வருகிறார் தமிழக கவர்னர். இது, மாநில அரசுக்கும் ராஜ்பவனுக்கும் தேவையற்ற முரண்பாடுகளை அதிகரிக்கச் செய்வதுடன் சர்ச்சைகளையும் உருவாக்கி வருகிறது. இந்த நிலையில், இந்த அதிகாரத்தில் திருத்தம் செய்ய தனி நபர் மசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார் திமுக எம்.பி.வில்சன். முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் உள்ள நிலையில் இந்த மசோதாவை வில்சன் தாக்கல் செய்கிறார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 200வது பிரிவைத் திருத்துவதற்கும், மாநில சட்டமன்றங்களால் அனுப்பப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுக்கும் காலக்கெடுவை நிர்ணயிப்பதற்கும் தனி உறுப்பினர் மசோதாவை, வில்சன் இன்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். அதாவது ஆளுநர் பயன்படுத்தி வரும் அந்த சலுகையிலேயே மொத்தமாக கை வைக்கும் அளவிற்கு திமுக எம்பி இன்று மசோதாவை தாக்கல் செய்துள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 200வது பிரிவைத் திருத்துவதற்கும், மாநில சட்டமன்றங்களால் அனுப்பப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுக்கும் காலக்கெடுவை நிர்ணயிப்பதற்கும் தனி உறுப்பினர் மசோதாவை, வில்சன் இன்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துகிறார். அதாவது ஆளுநர் பயன்படுத்தி வரும் அந்த சலுகையிலேயே மொத்தமாக கை வைக்கும் அளவிற்கு திமுக எம்பி இன்று மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார்.
ஆளுநர் ஆர். என் ரவி நீட் மசோதாவை இனியும் தாமதிப்பது தவறானதாக இருக்கும். அவரின் பதவிக்கு இது அழகு அல்ல. ஆளுநர் இந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதை விட வேறு வழியில்லை. ஆனால் அதை மீறி அவர் மசோதாவை அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருகிறார். இது சட்ட விதிகளுக்கு எதிரானது என்று கூறி இன்று முரசொலி தலையங்கம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக