ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

சனாதனத்திற்கு எதிரான களத்தில் திமுகவும் ஸ்டாலினும்- He will be sensitive to the public ! definitely that is the great quality of leaders! ஜெகத் கஸ்பார் அடிகளின் பேட்டி

 ஜெகத் கஸ்பார் அடிகள்  : தளபதி திரு முக ஸ்டாலின் அவர்கள் அவரது தந்தை அளவுக்கு எழுத்தாற்றல் பேச்சாற்றல் எல்லாம் இருக்கிறதோ இல்லையோ ஆனால் மக்கள் கருத்தை கண்டு அஞ்சுகிற ஒரு உயர்ந்த பண்பு இருக்கிறது!   இதை நான் மறுக்கவே மாட்டேன்!

அவர் லோக்கல் அட்மினிஸ்ட்ரேஷன் மினிஸ்டரா 2004 இல இருந்த பொழுது ஷெட்டி என்றொரு ஐ ஏ எஸ் ஆபீசர் இருந்தார் அவரை மாதிரி ஒரு கறாரான ஆபீசரை இந்த இருபத்தி ஐந்து வருடத்தில் பார்க்கவே முடியாது.
அஞ்சு பைசா கரப்ஷன் பண்ண மாட்டாரு ஆனால் வருத்து எடுத்துடுவார்.
அவருக்கு முழு சுதந்திரம் கொடுத்து வேலை செய்ய வச்சார்
அவருக்கு என்னை போல பெரியாரிய அம்பேத்கரிய கோட்பாடுகள் எல்லாம் இருக்குமா தெரியாது ஆனால்
மக்கள் கருத்துக்கு கூச்சப்படுகின்ற அல்லது அச்சப்படுகின்ற தன்மை என்பது
He will be sensitive to the public ! definitely that is the great quality of leaders!
இது ஒரு தலைவருக்கு உரிய மிகப்பெரிய பண்பு!
இந்த ஒற்றைப்பண்பே அவரை முன்னகர்த்தி செயலிலும் என்று எண்ணுகிறேன் ....
இன்றைய பாஜக ஆர் எஸ் எஸின் அரசியல் எதை நோக்கி செல்கிறது என்றால் ,
தமிழ் சமூகம் தன்னை தமிழ் சமூகமாக பார்க்க கூடாது தன்னை அடிப்படையில் ஒரு சாதிய சமூகமாக பார்க்கவேண்டும்
உங்களது முதல் அடையாள உணர்வு என்பது தமிழ் என்பதை விட முதலில் நீங்கள் சாதியாக இருக்கவேண்டும் . அந்த சாதிக்குள்ளும் நீங்கள் மதவாதியாக இருக்கவேண்டும்,
அதன் பிறகு வேண்டுமென்றால் நீங்கள் தமிழாக உணருங்கள் என்பது இந்த ஆர் எஸ் எஸ் சனாதனத்தின் அரசியல் சூத்திரம்
இவர்கள் இன்று சனாதன தேசியத்தை உருவாக்கி அதை சகலருக்குமான ஒரு இந்துதேசியமாக வரையறுக்க முயல்கிறார்கள்
சனாதனம் என்பது வேறு இங்கிருக்க கூடிய சிவனியம் வைணவம் முருக பக்தி மாரியம்மன் பக்தி குலதெய்வ வழிபாடுகள் சிறுதெய்வங்கள் என்பது வேறு முற்றாக வேறு.
பிஜேபி ஆர் எஸ் எஸ் புள்ளியோட இங்கிருக்க கூடிய நாம் தமிழர் மக்கள் நீதி மய்யம் எல்லாரும் ஒண்ணுசேர்ந்து ...
அதுக்காக நான் திமுகவை புனிதப்படுத்தல இன்னைக்கு ஒரு கேடயம் இருக்கு . தேர்தலை வெல்லக்கூடிய உணர்வாளர்கள் பலர் . பலரல்ல பலப்பல இலட்சம் உணர்வாளர்களை கொண்ட ஒரு கட்சி . அது தேர்தலை வெல்லக்கூடிய தகுதியாக இருக்கிறது


கருத்துகள் இல்லை: