வியாழன், 29 ஏப்ரல், 2021

பாஜக தமிழ்நாட்டில் 20 தொகுதிகளிலும் வாஷ் அவுட் ஆகும்! உளவுத்துறை செய்தி - டெல்லி அதிர்ச்சி

tamil.samayam.com :தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ளது. தமிழகத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகள் யார் ஆட்சிக் கட்டிலில் அமரப்போகிறார்கள் என்பதற்கு மக்கள் அளித்த தீர்ப்பை அன்றைய தினம் பார்த்துவிடலாம்.

தேர்தலுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் சுமார் ஒரு மாத இடைவெளி இருந்த நிலையில் அந்த சஸ்பென்ஸை மெல்ல அவிழ்க்கும் விதமாக இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு அல்லது வாக்கு கணிப்பு முடிவுகள் வெளியாக உள்ளன. தமிழகத்தில் யாருக்கு வெற்றி? லீக்காகும் வாக்குக் கணிப்பு முடிவுகள்!தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் திமுகவுக்கு சாதகமாக இருந்தன. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய நிலவரம் இன்று தெரிந்துவிடும். அதிமுக எத்தனை இடங்களைப் பெறும் என்பதைக் கடந்து அக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவின் நிலை என்ன என்பதை அறியும் ஆர்வம் மக்களிடையே இயல்பாக பார்க்கமுடிகிறது.

தேர்தலுக்கு முன்பாக, அதாவது பிரச்சாரம் உச்சத்தில் இருந்த சமயம் மத்திய உளவுத்துறை தமிழகத்தில் சத்தமில்லாமல் ஒரு ஆய்வு நடத்தி அந்த ரிப்போர்ட்டை டெல்லிக்கு அனுப்பியுள்ளதாக கூறுகிறார்கள். பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளின் நிலவரம் என்ன என்பது தான் அப்போது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அசைண்ட்மெண்ட்.

அந்த ரிப்போர்ட் மேலிடத்துக்கு ஷாக் அளிக்கும் விதமாக இருந்திருக்கிறது. 20 தொகுதிகளிலும் வாஷ் அவுட் ஆகும் என்பது தான் அந்த தகவல். அதன் பின்னர் கட்சி நிர்வாகிகளுக்கு செம டோஸ் விழுந்துள்ளது. மோடி தமிழகம் வந்த போதும் கட்சி நிர்வாகிகள், அதிமுகவின் இரு முக்கிய தலைகள் ஆகியோரிடமும் இது பற்றி பேசியதாகவும் சொல்கிறார்கள்.

தமிழகத்திலிருந்து இரட்டை இலக்கத்தில் பாஜகவுக்கு எம்எல்ஏக்கள் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்கள். அதிலும் எல்.முருகன், அண்ணாமலை, எச்.ராஜா, குஷ்பூ, வானதி சீனிவாசன் உள்ளிட்ட ஸ்டார் கேண்டிடேட்டுகள் வெற்றி பெற வேண்டும் என மேலிடம் நினைக்கிறது. கன்னியாகுமரி இடைத்தேர்தலில் பொன்.ராதா கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
 


இலக்கு வைப்பதிலோ, விருப்பப்படுவதிலோ எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் கள யதார்த்தம் வேறு மாதிரியாக அல்லவா இருக்கிறது. அதே உளவுத்துறை தேர்தலுக்கு பிந்தைய நிலவரத்தையும் ரிப்போர்ட்டாக தயார் செய்து மீண்டும் டெல்லிக்கு அனுப்பியுள்ளது. இந்த முறை டென்ஷனின் உச்சத்துக்கே சென்றுவிட்டதாம் டெல்லி மேலிடம். ஏனெனில் கடந்த முறை அனுப்பியது போலவேதான் இந்த ரிப்போர்ட்டும் உள்ளதாம். இதனால் அடுத்தகட்டமாக என்ன செய்வது என டெல்லி தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

கருத்துகள் இல்லை: