ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

எந்த அளவுக்கு அழிவை ஏற்படுத்த முடியும் என்பதை, இந்தியாவில் கொரோனா 2-வது அலை காட்டுகிறது - உலக சுகாதார அமைப்பு

எந்த அளவுக்கு அழிவை ஏற்படுத்த முடியும் என்பதை, இந்தியாவில் கொரோனா 2-வது அலை காட்டுகிறது - உலக சுகாதார அமைப்பு
dailythanthi.com ஜெனீவா உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானாம் கேப்ரிஷியஸ் கூறியதாவது:- கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடப்படாததால், உலகம் முழுவதும் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு கவலை அளிப்பதாக உள்ளது.  வைரஸ் பரவலை தடுக்க இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை வரவேற்கிறோம். தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதுடன், மக்கள் ஒன்றாக திரள்வதை தடுக்க இந்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா வைரசால் எந்த அளவுக்கு அழிவை ஏற்படுத்த முடியும் என்பதை, இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை நினைவுபடுத்துகிறது என கூறினார்.

கருத்துகள் இல்லை: