வெள்ளி, 30 ஏப்ரல், 2021

கொரோனா ஆக்சிஜன்: சமூக ஊடக காணொளிகளை தடுக்கக் கூடாது - உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

BBC .:இந்தியாவில் கொரோனா ஆக்சிஜனுக்கும் மருத்துவ உபகரணங்களுக்கும் நிலவும் தட்டுப்பாடு தொடர்பாக சமூக ஊடகங்களில் காணொளி வெளியிட்டு உதவி கேட்போரின் தகவல்களை முடக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.
அதையும் மீறி அத்தகைய தகவலை பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்தது.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் மிகக் கடுமையாக உள்ளது.
தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழந்து வருகிறார்கள். இந்த நிலையில், மருத்துவமனைகளில் போதுமான ஆக்சிஜன் இல்லாததாலும் போதிய சிகிச்சைக்கு இடம் கிடைக்காததாலும் பல இடங்களில் நோயாளிகள் உயிரிழக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
மேலும், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டோருக்கு ஆக்சிஜன் உள்ளிட்ட வசதிகள் கிடைக்காத நிலையை விவரித்து கண்ணீருடன் காணொளிகளை வெளியிட்டு வருகிறார்கள்.
இதில் பல இடங்களில் இத்தகைய தகவல் பகிருவோரை எச்சரிக்கும் வகையில் தவறான தகவலை பகிர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகங்களும் காவல்துறையும் எச்சரித்து வருகின்றன

இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து வழக்காக விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, "சமூக ஊடகங்களில் தங்களுடைய குறைகளை பதிவு செய்ய மக்கள் வெளியிடும் கருத்துகளையோ காணொளிகளையோ தவறான தகவலாகக் கருதக்கூடாது என்பதை தெளிவாக்க விரும்புகிறோம்," என்று கூறியது.

நீதிபதி விடுத்த எச்சரிக்கை

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

அவர்கள் பகிரும் தகவல்களை ஒடுக்க முயற்சிக்காதீர்கள். அவ்வாறு செய்வது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும். இந்தியாவில் தற்போது கொரோனா தடுப்பூசிக்காக ஒரே மருந்து இருவேறு விலைகளில் விற்கப்படுகிறது. ஏன் இந்த வேறுபாடு, தேசிய தடுப்பூசி திட்டத்தின்படி ஏன் கொரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தவில்லை? என்று நீதிபதி மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படும் ஆக்சிஜன் அளவு பற்றிய விவரத்தை நேரலையாக பதிவு செய்ய வேண்டும். கல்வியறிவில்லாத மக்கள், கொரோனா தடுப்பூசி பெற என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் நீதிபதி சந்திரசூட் கேள்வி எழுப்பினார்.

இந்த நாட்டில் கொரோனா முன் களத்தில் பணியாற்றும் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்களுக்குக் கூட அவர்கள் நோய்வாய்ப்படும்போது படுக்கை வசதிகள் கிடைக்காத நிலை நிலவுகிறது. அப்படியென்றால் விடுதிகள், கோயில்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட பிற இடங்களை ஏன் கோவிட் பராமரிப்பு நிலையங்களாக மாற்றக்கூடாது? மருத்துவத்துறை முடங்கிப் போகாமல் தடுக்க மருத்துவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், சுகாதாரத்துறையில் இருந்து ஓய்வு பெற்ற அலுவலர்களை சிறப்புப் பணியாக வேலை செய்ய ஏன் நியமிக்கக்கூடாது? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

நான் ஒரு நீதிபதியோ குடிமகனோ - இந்த நாட்டில் எனது குறைகளை வெளிப்படுத்த சமூக ஊடகத்தை பயன்படுத்த விடாமல் தடுப்பது மிகப்பெரிய கவலை தரக்கூடிய விஷயம். ஒரு குடிமகனுக்கு படுக்கை வசதியோ, ஆக்சிஜன் வசதியோ தராமல் இருந்தால் அவரை நாம் அவமதிப்பதாகவே கருத வேண்டும். இந்த நிலை மனிதாபிமான நெருக்கடியின் அடையாளம் என்று நீதிபதி சந்திரசூட் குறிப்பிட்டார்.

முன்னதாக, இந்த வழக்கு விசாரணையின்போது மத்திய அரசு சார்பில், நாட்டில் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்றும் அதன் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் தினமும் 6,000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. தற்போது அது 9,000 மெட்ரிக் டன் அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் ஆக்சிஜன் ஏற்றிச் செல்லும் டாங்கர்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு அதன் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு கூறியது.

இதைத்தொடர்ந்து நீதிபதி, இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலையை தனியார் நிறுவனம் நிர்ணயிக்க முடியாது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் எவ்வித அரசியலுக்கும் இடம் கொடுக்காமல் மத்திய அரசுடன் டெல்லி அரசு இணைந்து பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இது போராட்டம் அல்ல போர் - டெல்லி உயர் நீதிமன்றம்

The Delhi High Court, while hearing the situation on Kovid-19 on Friday, said on the lack of beds and oxygen, that it is 'complete failure of the state'.

இதேவேளை, கொரோனா சிகிச்சைக்கான படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதிகளுக்கு நிலவும் தட்டுப்பாடு தொடர்பான வழக்கை டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் விபின் சாங்கி, ரேகா பல்லி அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது எந்தவொரு மாநில அரசின் பெயரையும் குறிப்பிடாமல் கருத்து வெளியிட்ட நீதிபதிகள், இது போராட்டம் அல்ல, இது ஒரு போர் என்று குறிப்பிட்டனர்.

"கொரோனா தொற்று பரவத் தொடங்கியது முதல் ஒட்டுமொத்த சுகாதாரத்துறையின் அமைப்பும் முடங்கியிருக்கிறது. இந்த அளவுக்கு நிலைமை மோசமாகும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள. அதே சமயம் அடிப்படை வசதிகள் சரியான வகையில் இருந்திருக்கவில்லை. போதுமான படுக்கை வசதிகளோ, ஆக்சிஜன் வசதிகளோ இல்லாத நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை தர வேண்டிய மருத்துவர்கள் கையறு நிலையாக அழுகிறார்கள்," என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

டெல்லி எல்ஜிக்கு கொரோனா

கொரோனா

பட மூலாதாரம், ANIL BAIJAL

இதற்கிடையே, டெல்லியில் துணைநிலை ஆளுநராக உள்ள அனில் பைஜாலுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு மிதமான கொரோனா அறிகுறிகள் உள்ளதாகவும் பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆக இருப்பது தெரிய வந்ததாகவும் பிடிஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: