திங்கள், 26 ஏப்ரல், 2021

சீமானால் கைவிடப்பட்ட நடிகை விஜயலட்சுமி வீதிக்கு வந்தார் . வாடகை செலுத்த முடியாமல்

.lankasri.com :சென்னையில் தங்கியிருந்த வீட்டிற்கு வாடகை கொடுக்காததால் நடிகை விஜயலட்சுமி வீதிக்கு வந்துள்ளார். சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள அடுக்குமாடி வீட்டின் தரைத் தளத்தில் நடிகை விஜயலட்சுமி தங்கியிருந்தார். சில நாட்களாக தனது சகோதரியுடன் தங்கிவிட்டு தனது வீட்டுக்கு திரும்பிய போது அறைக்குள் ஆண் ஒருவர் குளித்துக் கொண்டிருப்பதை பார்த்து அப்பார்ட்மெண்ட் நிர்வாகிகளிடம் சத்தமிட்டுள்ளார். பின்னர் 3 மாதமாக வாடகை தராததால் அறையை வேறு நபருக்கு ஒதுக்கியதாகவும் பொருட்களை பக்கத்து அறையில் வைத்திருப்பதாகவும் அவருக்கு பதில் வந்துள்ளது. இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜயலட்சுமி ஹரி நாடார் தனக்கு தெரிந்த பாதுகாப்பான இடம் என்று கூறி இந்த அபார்ட்மென்ட்டில் தன்னை தங்க வைத்ததாகவும் , தற்போது அவருக்கு தெரிந்தோ தெரியாமலோ இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறினார்.

ஒரு காலத்தில் சீமானை வரைமுறையில்லாமல் விமர்சித்ததை மறந்து, சீமான் தனது பேட்டியை பார்த்து தனது நிலையை உணர்ந்து உதவ வேண்டும் என்றும் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார் விஜயலட்சுமி.

இது குறித்து பேசிய அடுக்குமாடி வீட்டின் மேலாளர், கடந்த பிப்ரவரி 24 முதல் தங்கியிருந்த விஜயலட்சுமி இதுவரை வாடகைப் பணம் எதுவும் தரவில்லை என்றும் அவரது பொருட்களை வெளியில் தூக்கி போடாமல் , மாற்று அறையில் வைத்து விட்டு அவர் தங்கியிருந்த அறையை வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட்டிருந்தோம் .

ஆனால் விஜயலட்சுமி நாடகமாடுவதாக தெரிவித்த அவர், தங்கள் அறை உதவியாளரான சிவா என்பவரை விஜயலட்சுமி செருப்பால் தாக்கியதாக குற்றம் சாட்டினார்.

அத்தோடு ஹரி நாடாருக்கும் இந்த பிரச்சனைக்கும் சம்பந்தமே இல்லை எனவும் ஜாவித் என்பவர் மூலமே விஜயலட்சுமி அபார்ட்மென்ட்க்குள் வந்தார் என்றும் கூறினார்.

பின்னர் பொலிசார் அங்கு வந்து விஜயலட்சுமியை சமாதானப்படுத்தி மாற்று இடத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.

கருத்துகள் இல்லை: