திங்கள், 26 ஏப்ரல், 2021

ஸ்டெர்லைட் ஆலையில் 4 மாதத்துக்கு மட்டும் ஆக்சிஜன் உற்பத்தி- தமிழக அரசு அனுமதி

maalaimalar :ஸ்டெர்லைட் ஆலையில் 4 மாதத்துக்கு மட்டும் ஆக்சிஜன் தயாரிக்க தற்காலிகமாக அனுமதிப்பதாக அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இதையடுத்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:  
* தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்காக தற்காலிகமாக 4 மாதங்களுக்கு திறக்கலாம்.

* ஸ்டெர்லைட் ஆலையில்  தாமிர உற்பத்தி உட்பட எவ்வித உற்பத்தி அலகையும் திறக்க, இயக்க அனுமதியில்லை.

* ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

* உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் விநியோகத்தில் தமிழகத்துக்கே முன்னுரிமை வழங்க வேண்டும்.

* அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுத்த முடிவின்படி 4 மாதங்களுக்கு மட்டும் ஸ்டெர்லைட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை ஸ்டெர்லைட் ஆலைக்கு 4 மாதங்களுக்கு மட்டும் மீண்டும் வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

* ஸ்டெர்லைட்டை கண்காணிக்க தூத்துக்குடி கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: