திங்கள், 26 ஏப்ரல், 2021

மே 1 மற்றும் 2 தேதிகளில் முழு ஊரடங்கை அறிவிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை

 Vishnupriya R - tamil.oneindia.com :  சென்னை: மே 1 மற்றும் 2 ஆகிய இரு தேதிகளிலும் முழு ஊரடங்கை அறிவிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையை மே 2ம் தேதி நடைபெற உள்ளது.
அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் விறுவிறுப்பாக செய்து வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலையை விட்டால் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேறு நிறுவனங்களே தமிழகத்தில் இல்லையா?..
வாக்கு எண்ணிக்கை குறித்து பேசிய தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, கொரோனா பாதிப்பால் வாக்கு எண்ணிக்கை தாமதமாகலாம் என்றும் மே 2ம் தேதி நள்ளிரவுக்குள் அனைத்து தொகுதிகளிலும் முடிவை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம் என்றும் கூறியிருந்தார்

ஏப்ரல் 30 இதனிடையே, மே 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என கேள்வி எழுந்தது.
இது குறித்து விளக்கமளித்த தேர்தல் ஆணையம், ஞாயிற்றுக் கிழமை ஊரடங்குக்கான உத்தரவு ஏப்ரல் 30ம் தேதி வரையிலேயே போடப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் கட்டுப்பாடுகள் மே 2ம் தேதி மட்டும் ஊரடங்கு இருக்காது என தெரிவித்திருந்தது. இருப்பினும், வாக்கு எண்ணிக்கையின் போது மக்கள் கூடுவதை தவிர்க்க அன்றைய தினம் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என கூறப்பட்டு வந்தது



இந்த நிலையில், மே 1, 2ம் தேதி முழு ஊரடங்கை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
பணி தொடர்பான வாகனங்களை மட்டும் இரண்டு நாட்களில் அனுமதிக்கலாம் என்றும் மக்கள் பாதிக்காதவாறு முழு ஊரடங்கு அறிவிப்பை ஏப்ரல் 28ல் வெளியிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.வாக்கு எண்ணிக்கையின் போது கூட்டம் கூடுவதை தவிர்க்கும் விதமாக அரசுக்கு இந்த பரிந்துரையை வழங்குவதாகவும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
எனவே இதுகுறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி விரைவில் அறிவிக்கும் என தெரிகிறது.

கருத்துகள் இல்லை: