வெள்ளி, 30 ஏப்ரல், 2021

ஜெர்மனியில் மருத்துவமனையில் நடந்த கொலைவெறி தாக்குதல்- 4 பேர் உயிரிழப்பு

ghgj  மாலைமலர் "  மருத்துவமனையில் கொல்லப்பட்டவர்கள் தீவிரமான மற்றும் தீவிர வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜெர்மனியின் போட்ஸ்டாம் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் நேற்று இரவு திடீரென ஒரு நபர் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் பலத்த காயமடைந்தார்.
இந்த தாக்குதல் பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இறந்தவர்களின் உடல்கள் அவர்கள் தங்கியிருந்த அறைகளில் இருந்து மீட்கப்பட்டன.
மருத்துவமனையில் பணியாற்றிய 51 வயது நிரம்பிய பெண்ணை வலுவான சந்தேகத்தின்பேரில் போலீசார் கைது செய்துள்ளனர். தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
இறந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளாக இருக்கலாம் என உள்ளூர் நாளிதழில் செய்தி வெளியானது.
கொல்லப்பட்டவர்கள் தீவிரமான மற்றும் தீவிர வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இந்த கொலைகளுக்கான காரணம் மற்றும் சூழ்நிலைகள் குறித்து எந்த விவரமும் தெரிவிக்கவில்லை

கருத்துகள் இல்லை: